தனியாக நான் மட்டும்
துணையாக நீ இல்லாததால்;
கூடி எல்லோரும் இருந்தாலும்
வாடி இருக்கும் என் முகம் மட்டும்!
படிக்காமல் புதுப்பெண் பட்டம் 
வாங்கிருந்தாலும் – நீ வாங்காத 
பட்டத்தால் வளைகுடாவில் இப்போது!
எல்லாமே இருக்கு என்றாய் 
மணமாவதற்கு முன் ;
மறைத்துவிட்டாயே நீ இருக்கமாட்டாய் என் முன்!
பழக்கமில்லா உன் உறவினரும் 
என்னைச் சுற்றி இங்கே;
என்னைச் சுற்ற வேண்டிய 
நீயோ எங்கே!
அழுதுக்கேட்டாலும் 
அலுக்காமல் உன் பதில்
உனக்காகத்தானே என்று;
மருந்தேதும் இல்லையோ 
மாற்றுவதற்கு – நீ வந்தால் மட்டுமே 
முடியும் என்னை தேற்றுவதற்கு!! 
Tweet

அனைத்து வரிகளும் அழகு..
ReplyDelete