முரண்டுச் செய்யும்
குழந்தைக்குச் சோறு 
ஊட்ட உந்துக்கோலாய்
அன்னைக்கு!
காதலனுக்குக் காதலியாய்;
காதலிக்குக் காதலானாய்;
விவஸ்தைக் கெட்ட
விழிகளுக்கு;
வெறுமே என்று!
பொய்யைக் கொண்டு
மை நிரப்பி;
வழியும் கவிதைக்குக்
கருவாய் 
கவிஞனுக்கு!
மற்றொருக் கோள்;
என்பதை மறந்து;
கதை அளந்து;
கதைப் படைத்து வர்ணித்து;
வரிகளில் மொழிய
மட்டுமல்ல நான்! 
எதிரொலிக்கும் ஒளிக்கு;
வழிக்கொடுத்து;
வழிக்காட்டிக் கைக்கட்டி
உலாவரும் நிலா;
நகரும் தேதிக்கு 
நாட்காட்டி நான்!
Tweet

அருமையான வரிகள் அனைத்தும்
ReplyDeleteகாதலனுக்குக் காதலியாய்;
ReplyDeleteகாதலிக்குக் காதலானாய்;
அருமை!