மூச்சுத்திணறி
முறுக்கிக்கொண்டு;
செவியை நிரப்பும்
உன் ஒலியைக்
கேட்டதில்லை!
பாலுக்கு அழுது;
சிவக்கும் உன் 
கன்னத்தை நான்
தொட்டதில்லை!
எரிச்சலில்
என் மனைவியின் 
கூந்தலைக் 
கொத்தும் உன் 
பிஞ்சுவிரலை
முத்தமிட்டதில்லை!
அலைத்தொடர்பில் 
வெகுதொலைவில்
உள்ள எனக்கு;
உன் நிழற்படம் மட்டும்!
நான் அனுப்பிய 
பெயர் மட்டும் உன்னை 
வருடிக்கொண்டு;
என் நெஞ்சை 
நெருடிக்கொண்டு!
Tweet

அன்பு சகோதரா,
ReplyDeleteஎப்போது தீரும் நம் ஏக்கங்கள்.......
எவ்வளவு வலி நிறைந்தது உங்கள் வரிகள்