பம்பரமும் 
கோலியும் விளையாடும்
அண்ணன்களுடன் 
போட்டியிடமுடியாமல்
ஒரத்தில்;
ஏறாத வயதைக் கண்டு
ஏக்கமாய் நான்!
ஒற்றை மிதிவண்டியின்
சக்கரத்தில் 
ஊரைச் சுற்றி 
உலாவரும் போது;
மிதிவண்டியிலே ரோந்துவரும்
முதியோனைக் கண்டு
ஏக்கமாய் நான்!
பாடத்தால் மூளையை
திணறடிக்கும்;
பள்ளியைக் கண்டுவிட்டு;
கல்லூரியைக் கண்டு
ஏக்கமாய் நான்!
பட்டங்களைப் 
பெறுவதற்கு முன்னே;
முண்டியடித்த 
நினைவுகள் ஏக்கமாய்
உழைக்க வேண்டுமென!
உழைத்து அழுத்து;
ஒய்வூதியம் 
பெறும் போது;
மழலையைக் கண்டு
ஏக்கமாய் நான்!
Tweet
அழகான வரிகள்
ReplyDelete