இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!!


புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள்
என் அம்மா!
அசைக்காதத் தலையைச்
சம்மதம் என்றேப் பிடிங்கிச்
சென்றாள் புகைப்படத்தை!

நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!

முழுவதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!
எடுத்து சென்றாய் என் இதயத்தைக்
கூடவேக் கொடுத்துச்
சென்றாய் குழந்தையை!!

பத்தே நாட்களின் வாழ்க்கை;
பறித்துக்கொண்டதுப்
பாழாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாவாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு மத்தியிலே!

வறண்டுப் போன கண்களும்;
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!

கெஞ்சினேன் கொஞ்சினேன்;
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய்
குழந்தைக்குப் பெயரை மட்டும்!!

துக்கம் தொண்டையை அடைக்க;
உருண்டு வந்த கண்ணீரையும்
ஓரமாய் துடைத்துவிட்டு ;
உள்ளுக்குள்ளே; உள்ளத்திற்குள்ளே;
உரைத்தேன் – இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள்
என் அம்மா!
அசைக்காதத் தலையைச்
சம்மதம் என்றேப் பிடிங்கிச்
சென்றாள் புகைப்படத்தை!

நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!

முழுவதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!
எடுத்து சென்றாய் என் இதயத்தைக்
கூடவேக் கொடுத்துச்
சென்றாய் குழந்தையை!!

பத்தே நாட்களின் வாழ்க்கை;
பறித்துக்கொண்டதுப்
பாழாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாவாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு மத்தியிலே!

வறண்டுப் போன கண்களும்;
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!

கெஞ்சினேன் கொஞ்சினேன்;
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய்
குழந்தைக்குப் பெயரை மட்டும்!!

துக்கம் தொண்டையை அடைக்க;
உருண்டு வந்த கண்ணீரையும்
ஓரமாய் துடைத்துவிட்டு ;
உள்ளுக்குள்ளே; உள்ளத்திற்குள்ளே;
உரைத்தேன் – இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

2 comments:

  1. கள்ளி கட்டில் பிறந்த தாயே !
    என்னை கல்லோடிச்சி வளர்த்த நீயே !
    முல்லுகாட்டில் முளைச்ச நீயே
    என்ன முள்ளு தைக்க விடல நீயே !
    - வைரமுத்துவின் வரிகள் ...மீண்டு ஒரு அம்மாவை பற்றிய பாடல்..
    எந்த சூழலில் வளர்ந்த மனிதனாக இருந்தாலும் ஒரு துளி கண்ணீர் நிச்சயம்
    படம் : தென்மேற்கு பருவக் காற்று...
    இந்த பாடலை கேட்க அல்லது பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை அழுத்தவும்
    http://onlinetamilsongs.blogspot.com/2010/10/thenmerku-paruvakatru-songs-download.html

    ReplyDelete
  2. யாருய நீ
    ...அருமை அருமை...
    வார்த்தைகளே இல்லை
    இப்படிக்கு வடிவழகன்
    pavalarvadi@gmail.com

    ReplyDelete