பரிவுக்காட்ட ஆளில்லாமல்
பிரிவுகளில் பிதுங்கியதுப் போதும்;
அழுத இரவுகளும்;
அழுத்தும் கனவுகளும்;
இனி - ஒய்ந்துப்போகட்டும்;
கொஞ்சம் ஒய்வும் எடுக்கட்டும்!
மூட்டுவலியும்
முதுகுவலியுடன்
பாலையில் பாழாவதற்கு
முன்னே;
முந்திக்கொண்டு
வளைடாவிற்கு
முற்றுப்புள்ளி வைத்தேன்!
சத்தான முடிவுகளால்
விசா ரத்தாகிப்போனது;
இனி - நித்தம் என்
இரத்த உறவுகளோடு
நிஜத்திலேக்
கதைத்துச் சிரிப்பேன்;
மன கனத்தை
அறுத்து எடுப்பேன்!
கொளுத்தும் வெயிலானாலும்;
கரண்டே இல்லையென்றாலும்;
மகிழ்ந்து ரசிப்பேன்;
என் மழலையின்
மடியில் கிடப்பேன்!
unmai nanpaa!
ReplyDeleteazhakiya kavithai nanpaa!
உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி சீனி அவர்களே.
ReplyDeleteமிகவும் ரசித்தேன்.
ReplyDelete"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா ?" (படம்: ஊருவிட்டு ஊருவந்து)
ithunai naala romba kavala pattu eludhuna yaser bai sandhosama eludhi irukuradha paartha!!!!!!!!!
ReplyDeleteooruku vandhutar pola irukudhae???????
திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. ஆரோக்கியமான உங்கள் கருத்திற்கு.
ReplyDeleteஇன்னும் ஊருக்கு வரல , எல்லாமே சோகமாகவே எழுதி இருக்குற மாதிரி சொல்லிடிஙகளே அப்துல் பாய்.
ReplyDeleteSALAM,
ReplyDeleteகவிதை அருமை,நீங்க எப்போ ஜி ஊருக்குவரிங்க
புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்),
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்