குளு குளு அறையில் இருந்தாலும்
உள்ளம் மட்டும் சூடாக!
கட்டிய மனைவியும் 
பெற்றெடுத்த பிள்ளையும் 
கரைக்கு அப்பால்!
வசந்தம் இல்லா 
வளைகுடாவில்  
வசமாக மாட்டிக்கொண்டேன்!
 என் உறவுகளை காண
அலுவலகம் விதித்த கெடு 
வருடத்திற்கு ஒரு மாதம்!!
தூர தேசத்தில் உள்ளதால் 
பாரமானது பாசம்! 
ஆடைகள் பல அனுப்பினாலும்
அலமாரியிலே புகுத்துகிறாய்;
அருகில், நீ இல்லாத எனக்கு 
எதற்கு என்று வினாக் குறியையும் இடுகிறாய்!!
நீயும் நானும் 
சிரித்து சிரித்து பேசினாலும்;
ஒருவர் அழுவது ஒருவருக்கு தெரியாமல்;
ஒருவருக்குமே தெரியாமல்!!!
இல்லாதா திர்ஹம்சால் திடிரென்று 
இணைப்பும் துண்டித்துவிட
இதயம் மட்டும் கனக்கும்;
மீண்டும் ஒரு முறை  உன் குரலுக்காக!!
Tweet
ஒருவர் அழுவது ஒருவருக்கு தெரியாமல்;
ReplyDeleteஒருவருக்குமே தெரியாமல்!!!---உண்மை....
நன்றி Mums
ReplyDelete