ஒரு முறைக் கூட


என்ன வேண்டும்
என்றதும்;
கொட்டித்தீர்த்தாய்;
உதைத்துப் பிரளப் பந்து;
அடித்து விளையாட
மட்டை;
அணைத்துக் கொள்ளப்
பொம்மை;
இழுத்துச் செல்லச்
சிறுவண்டி;
ருசித்துக் கொள்ள
மிட்டாய்;
பசியை வெல்ல ரொட்டி;
வரிசைப்படுத்தும்
சொல்லழகைக் கேட்டும்;
விழியின் தாழ்ப்பாளை
உடைத்துக் கண்ணீர்
கரைப் புறண்டது;
ஒரு முறைக் கூட
நான் வேண்டும் என;
நீ உரைக்காததைக் கண்டு!

என்ன வேண்டும்
என்றதும்;
கொட்டித்தீர்த்தாய்;
உதைத்துப் பிரளப் பந்து;
அடித்து விளையாட
மட்டை;
அணைத்துக் கொள்ளப்
பொம்மை;
இழுத்துச் செல்லச்
சிறுவண்டி;
ருசித்துக் கொள்ள
மிட்டாய்;
பசியை வெல்ல ரொட்டி;
வரிசைப்படுத்தும்
சொல்லழகைக் கேட்டும்;
விழியின் தாழ்ப்பாளை
உடைத்துக் கண்ணீர்
கரைப் புறண்டது;
ஒரு முறைக் கூட
நான் வேண்டும் என;
நீ உரைக்காததைக் கண்டு!

5 comments:

  1. அழகான வரிகள்

    ReplyDelete
  2. ஒளிந்திருக்கும் வரிகளின் அழகை கருத்துக்களால் வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி சிநேகிதி அவர்களே

    ReplyDelete
  3. கேட்கிறவர்கள் இப்படி கூட நினைக்க முடியமா ?

    ReplyDelete
  4. ஆமாம் சூர்யாஜீவா அவர்களே.

    ReplyDelete
  5. "ஒரு முறைக் கூட
    நான் வேண்டும் என;
    நீ உரைக்காததைக் கண்டு!"

    உன் வார்த்தையில் உள்ள வலியை உணர முடிகிறது சகோ...

    ReplyDelete