அணை 999



உரிமை உண்டு
என உரைக்கும்
வரலாறு;
உடைப்போம் என
அரசியல் செய்யும்
தகராறு;
அணை என்பதை
மறந்துவிட்டு;
கட்டிப்புரளும் உணர்வுகள்!

விரிசல் என அங்கே
முழக்கம்;
உடைத்தால் உறவுகளில்
விரிசல் என இங்கே
முழக்கம்;
சுற்றியிருக்கும் புராணச்
சொந்தங்கள் நீர் தர மறுக்கும்!

பஸ் உடைப்பு;
ஆள் எரிப்பு – சேதங்கள்
மனிதநேயத்திற்க்கு;
வழக்கமான அரசியலால்;
பழக்கமான பட்டியலில்
அணைத்துக்கொண்டோம்;
அணை உன்னை!


உரிமை உண்டு
என உரைக்கும்
வரலாறு;
உடைப்போம் என
அரசியல் செய்யும்
தகராறு;
அணை என்பதை
மறந்துவிட்டு;
கட்டிப்புரளும் உணர்வுகள்!

விரிசல் என அங்கே
முழக்கம்;
உடைத்தால் உறவுகளில்
விரிசல் என இங்கே
முழக்கம்;
சுற்றியிருக்கும் புராணச்
சொந்தங்கள் நீர் தர மறுக்கும்!

பஸ் உடைப்பு;
ஆள் எரிப்பு – சேதங்கள்
மனிதநேயத்திற்க்கு;
வழக்கமான அரசியலால்;
பழக்கமான பட்டியலில்
அணைத்துக்கொண்டோம்;
அணை உன்னை!

6 comments:

  1. பழக்கமான பட்டியலில்
    அணைத்துக்கொண்டோம்;
    அணை உன்னை! --- அருமையான இணைப்பு! பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    ReplyDelete
  2. என் இணைப்போடு இணைந்த அன்பு நண்பருக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. அருமை தோழரே, தேவை நமது ஒற்றுமை.. அப்பொழுது தான் கற் சுவர்களால் கட்டப் பட்ட அணை சாதாரணமாக தெரியும்

    ReplyDelete
  4. மிக்க நன்றி சூர்யாஜீவா அவர்களே

    ReplyDelete
  5. அடாவடி செய்பவனோடு நியாயம் பேசத்தான் முடியமா

    ReplyDelete
  6. அரசியல் செய்யும் சித்து வேலைகளுக்கு அப்பவிகளுடந்தான் உங்கள் பாணியில் நியாயம் பேசவேண்டுமா?

    ReplyDelete