பேஸ்புக்



பெயரில் மட்டுமே
முகம் கொண்டு;
மெய்யா;பொய்யா என
முகம் கண்டு;
இனம் காண முடியா;
புதுவித நோய்!

நல்ல விசயங்கள்
பகிர்ந்தாலும்;
சாக்கடையின் மேல்
பறக்கும் கொசுக்களும்;
ஏமாந்துப் போகும்
அறிவாளிகளும் இங்கே!


பெயரில் மட்டுமே
முகம் கொண்டு;
மெய்யா;பொய்யா என
முகம் கண்டு;
இனம் காண முடியா;
புதுவித நோய்!

நல்ல விசயங்கள்
பகிர்ந்தாலும்;
சாக்கடையின் மேல்
பறக்கும் கொசுக்களும்;
ஏமாந்துப் போகும்
அறிவாளிகளும் இங்கே!

11 comments:

  1. //நல்ல விசயங்கள்
    பகிர்ந்தாலும்;
    சாக்கடையின் மேல்
    பறக்கும் கொசுக்களும்;
    ஏமாந்துப் போகும்
    அறிவாளிகளும் இங்கே!//

    கலக்கல் சகோ..

    நிதர்சனமும் கூட

    ReplyDelete
  2. தோழர் சம்பத்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. யார் சாக்கடையை சுத்தம் செய்வது ! அறிவாளியின் வீட்டிலும் சாக்கடை உண்டு. சாக்கடைக்கு பாரபட்சம் தெரியாது மனித மனதுக்குள்ளே எத்தனை சாக்கடைத் துளிகள். துணியை துவைத்து சுத்தம் செய்வது போல் மனதில்
    எழும் எண்ணங்கள் சுத்தம் செய்வதற்கே நல்ல உபதேசங்களைக் கேட்பதும் அறிவினை கல்வியினால் தீட்டிக் கொள்வதும் இறைவனை நாடி அவன் அருள் நாடுவதும். 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
    நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்...
    http://nidurseasons.blogspot.com/2011/11/blog-post_16.html

    ReplyDelete
  4. கலக்கலான கவிதை

    ReplyDelete
  5. முகமறியா மனங்களோடு
    வலைவெளியில் சந்திக்க ஒரு
    வாய்ப்பு இந்த முக புத்தகம் ..
    மனதோடு மட்டும் தொடர்பு கொள்பவர்கள்
    பிழைத்து கொள்கின்றார்கள்
    முகத்தோடு தொடர்பு கொள்ள நினைப்பவர்கள்
    ஏமாந்து போகின்றார்கள்

    ReplyDelete
  6. சூர்யாஜீவா அவர்களுக்கும் சிநேகிதி அவர்களுக்கும் மிக்க நன்றி கவிதையினைப் பாராட்டியதற்கு.

    ReplyDelete
  7. சகோதரர் முத்துவாப்பா அவர்களுக்கு,
    ஏமாந்த அறிவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளதிற்கு மனதை எதிர்பார்த்து தொடர்புக் கொண்டவர்களும் அடக்கம்தான்.மொத்தமாக அப்படி இல்லையென்றாலும் சுத்தமாக நிறையப் பேர் அதில் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை.

    ReplyDelete
  8. சகோதரர் நீடூர் அலி அவர்களே,
    யார் சாக்கடையை சுத்தம் செய்வது என்றக் கடினமானக் கேள்வியைக் கேட்டு உள்ளீர்கள். சுத்தம் செய்வது நல்ல விஷயம்தான்; அதே சமயத்தில் அதோடுக் கலந்துவிடுபவர்களும் உண்டு என்பதை மறுக்க முடியாது. நல்ல நண்பன் என்பவன் வாசனைத் திரவியக் கடையில் வேலை செய்பவன் போல;முழுக்க இல்லாவிடினும் வாசனையாவது நம் மேல் ஒட்டி இருக்கும். கெட்ட நண்பன் என்பவன் இரும்பு உலையில் வேலை செய்பவன் போல;அதன் துகல்கலாவது நம் மேலே ஒட்டியிருக்கும்.(நபி மொழியில் வார்த்தை தவறுதல்கள் இருந்தால் எல்லாம் வல்ல ரஹ்மான் மன்னிப்பானாக)
    நல்ல விசயங்கள்
    பகிர்ந்தாலும்;
    சாக்கடையின் மேல்
    பறக்கும் கொசுக்களும்;
    ஏமாந்துப் போகும்
    அறிவாளிகளும் இங்கே!

    நான் மொத்தமாக பேஸ்புக்கை சாடவில்லை!

    ReplyDelete
  9. face புக் மட்டும் அல்ல.. எல்லா இணைய தளங்களும் இதே மாதிரி தான் உள்ளன...சாக்கடைகள் இருக்கத் தான் செய்யும்.....எந்த ஒரு விஷயத்திலும், நல்லது, கெட்டது என்று இரு பக்கங்கள் உண்டு நாணயத்தை போல... இதில் நாம் அன்ன பறவை போல நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் ....

    ReplyDelete
  10. அன்புள்ள Mums அவர்களுக்கு, நாணயத்தின் இருப்பக்கம் இருப்பது உண்மைதான்;இருப்பவன்(அறிவு) ஒருப்பக்கத்தை தேர்தெடுக்கிறான், இல்லாதவன் நாணயத்தையே களவுக்கொள்கிறான்(முழுக்க தவறாகப் பயன்படுத்துதல்).

    ReplyDelete