வெளிநாட்டுக் கணவனின் சமையல்


அட்டவணைப் படி
அடுப்படிக்கு;
அடிப்படை உரிமையில்
முதன்மையாக இன்று நான்;

சமையலில்
அரைக்குறை அறிவுடன்;
VOIP கொடுக்கும் நிமிடத்துடன்;
நீ இருக்கும் பலத்துடன்
அடுப்படியில்!

சமையலில்;
புரியாத உன்
கைப்பக்குவத்தில்
புருவம் இரண்டும்
புரியாமல் தவிக்கும்;

தெரியாதச் சூத்திரத்தைப்
பக்குவமாக அலைப்பேசியில்
நீ பாடம் எடுக்க;
சிரித்துக்கொண்டேச்
சளைக்காமல்;
சலித்து எடுக்கும் உன் குறிப்பு!

செவியோடு;
உன்னோடு ஓட்டியிருக்கும்
எனைக் கண்டு;
நண்பர்கள் கிச்சுக் கிச்சுக் காட்ட;
கண் சிமிட்டியப்படி
காய்கறிகள் குதிக்கும்
குழம்பில்;
எனைப் போல!

அட்டவணைப் படி
அடுப்படிக்கு;
அடிப்படை உரிமையில்
முதன்மையாக இன்று நான்;

சமையலில்
அரைக்குறை அறிவுடன்;
VOIP கொடுக்கும் நிமிடத்துடன்;
நீ இருக்கும் பலத்துடன்
அடுப்படியில்!

சமையலில்;
புரியாத உன்
கைப்பக்குவத்தில்
புருவம் இரண்டும்
புரியாமல் தவிக்கும்;

தெரியாதச் சூத்திரத்தைப்
பக்குவமாக அலைப்பேசியில்
நீ பாடம் எடுக்க;
சிரித்துக்கொண்டேச்
சளைக்காமல்;
சலித்து எடுக்கும் உன் குறிப்பு!

செவியோடு;
உன்னோடு ஓட்டியிருக்கும்
எனைக் கண்டு;
நண்பர்கள் கிச்சுக் கிச்சுக் காட்ட;
கண் சிமிட்டியப்படி
காய்கறிகள் குதிக்கும்
குழம்பில்;
எனைப் போல!

14 comments:

  1. சமைக்கையிலே இனிக்கும் ( உன்னுடன் பேசிக்கொண்டு சமைப்பதால்)

    சாப்பிடுகையில் கசக்கும் .. (நீ இல்லாமல் சாப்பிடுவதால்)

    ReplyDelete
  2. மனமார்ந்த நன்றி மகேந்திரன் அவர்களே.

    ReplyDelete
  3. வர்ணனை அழகாயிருக்கு

    ReplyDelete
  4. வர்ணனையை வர்ணித்ததற்கு மிக்க நன்றி நிலாமதி அவர்களே.

    ReplyDelete
  5. செவியோடு;
    உன்னோடு ஓட்டியிருக்கும்
    எனைக் கண்டு, அருமைமையான வரிகள்

    ReplyDelete
  6. நன்றி அப்துல்லா அவர்களே. அனுபவம் என்றுமே உற்சாகத்தைத் தரும்.

    ReplyDelete
  7. அழகான , ரசிக்க கூடிய வரிகள் ........

    ReplyDelete
  8. அழகாக ரசித்த உங்களுக்கும் நன்றி Mum

    ReplyDelete
  9. ரசிப்புடன் சுவையான சமையலோ . உருவப்படமும் சமையலறையும் சுயமாய்த் தெரிகின்றது.

    ReplyDelete
  10. Arumaiyana Varigal Arputham thozhare...

    ReplyDelete
  11. சந்திரகெளரி அவர்களே மிகவும் மகிழ்ச்சி; படத்தைக் கண்டே சமையல் சுவை என்று சான்றிதழ் தந்தமைக்கு, மேலும் இது என் நண்பனின் புகைப்படம்.சுயமாய் எடுத்தவைதான் இவை.

    ReplyDelete
  12. அன்புத் தோழன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள், உங்களின் வரவு என்றும் என் பக்கத்தில் இருக்க அழைக்கிறேன்.

    ReplyDelete
  13. கவிதையை நயம்பட யாத்து சமைப்பவர் யாசர் அரஃபாத் அவர்கள் . கவிதை அருமை
    சமைப்பவர் யார் ? யாசர் அரஃபாத் அவர்களா ?
    சமையல் ருசி பார்க்க வேண்டும் திருவாளப் புத்தூரில்

    ReplyDelete
  14. அண்ணே, சமைப்பவர் என் நண்பர்..அவரை படம்பிடித்ததிற்கு பிறகு இந்த கவிதையை எழுதினேன்.

    ReplyDelete