மிதிவண்டி நான்



அறியாத வயதில் உனை
அணைத்துக்கொண்டு
உன் தந்தை என் மீது
நகர்வலம்!

நடைப் பழகியக் காலத்தில்
உன் இடையைச் சுமந்து;
மூன்றுச் சக்கரமாய் நான்
ஊர்வலம்!

ஓடும் வயதில்
நீ ஓரமாய்;
குரங்குப்பெடல் போட்டு
கல்லுக்கும் முள்ளுக்கும்
நீ முத்தமிட்டக் காலம்!

பள்ளிக்குச் செல்லும்
காலம் அது;
பந்தயமிட்டு எனை
மிதித்து எடுப்பாய்;
வேகத்தில் அழுத்தி எடுப்பாய்!

மண் பட்டாலும்
மல்லுக்கு நின்று
சுத்தம் செய்தக் காலம்;
சுத்தமாய் நீ மறந்து;
இப்போது
ஆவியாகும்
எரிபொருளை நிரப்பி;
ஆவியாக்கி நிற்கிறாய்
உன் ஆரோக்கியத்தை;
தேமே என்று நான்
மூலையில் ஒதுங்கி ஒடுங்கிப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஓரத்தை!


அறியாத வயதில் உனை
அணைத்துக்கொண்டு
உன் தந்தை என் மீது
நகர்வலம்!

நடைப் பழகியக் காலத்தில்
உன் இடையைச் சுமந்து;
மூன்றுச் சக்கரமாய் நான்
ஊர்வலம்!

ஓடும் வயதில்
நீ ஓரமாய்;
குரங்குப்பெடல் போட்டு
கல்லுக்கும் முள்ளுக்கும்
நீ முத்தமிட்டக் காலம்!

பள்ளிக்குச் செல்லும்
காலம் அது;
பந்தயமிட்டு எனை
மிதித்து எடுப்பாய்;
வேகத்தில் அழுத்தி எடுப்பாய்!

மண் பட்டாலும்
மல்லுக்கு நின்று
சுத்தம் செய்தக் காலம்;
சுத்தமாய் நீ மறந்து;
இப்போது
ஆவியாகும்
எரிபொருளை நிரப்பி;
ஆவியாக்கி நிற்கிறாய்
உன் ஆரோக்கியத்தை;
தேமே என்று நான்
மூலையில் ஒதுங்கி ஒடுங்கிப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஓரத்தை!

2 comments:

  1. அருமையான சொல்லாடல் தலைவரே

    ReplyDelete
  2. உங்கள் பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சி;தொடர்ந்து வரும் உங்கள் கருத்துக்கள் எனக்கு உற்சாகமாக இருக்கிறது.

    ReplyDelete