வர வேண்டாம்



வெற்று அறையில்
ஒற்றையாய் நின்று
உனக்குப் பிடித்த
வாசனைத் திரவியத்தை
நான் வாசம் பிடித்து!

கழட்டிவைத்த உன்
அழுக்குச் சட்டையை
இறுக்கப் பிடித்து;
நீர் கோர்த்த
விழிகள் இரண்டையும்
இமைகள் பிசைந்து;
குலுங்கி அழும்போதுக்
கூடவே மூக்கும் சேர்ந்து!

நீ நாடுவிட்டு நாடுச்
செல்வதால்;
நாதியற்று விசாலமான
அறையில் நான் ஓரமாய்;

சிவந்த விழியும்
சிந்திய மூக்கும் கண்டு;
அம்மாவும் அக்காவும்
அணைத்து ஆறுதல் அரும்பும்;
அனுபவம் உரைக்கும்;
இப்படித்தான் கொஞ்சக்காலம்
இருக்குமென்று!

மரத்துப்போனத் தழும்புகளும்;
வெறுத்துப் போன வலிகளும்;
பழகிவிட்ட இவர்களுக்கும்
சேர்த்து நான் அழுகிறேன்;
வரவேண்டாம் என் பிள்ளைக்கு
ஒருக்காலமும் இதுப்போல்!


வெற்று அறையில்
ஒற்றையாய் நின்று
உனக்குப் பிடித்த
வாசனைத் திரவியத்தை
நான் வாசம் பிடித்து!

கழட்டிவைத்த உன்
அழுக்குச் சட்டையை
இறுக்கப் பிடித்து;
நீர் கோர்த்த
விழிகள் இரண்டையும்
இமைகள் பிசைந்து;
குலுங்கி அழும்போதுக்
கூடவே மூக்கும் சேர்ந்து!

நீ நாடுவிட்டு நாடுச்
செல்வதால்;
நாதியற்று விசாலமான
அறையில் நான் ஓரமாய்;

சிவந்த விழியும்
சிந்திய மூக்கும் கண்டு;
அம்மாவும் அக்காவும்
அணைத்து ஆறுதல் அரும்பும்;
அனுபவம் உரைக்கும்;
இப்படித்தான் கொஞ்சக்காலம்
இருக்குமென்று!

மரத்துப்போனத் தழும்புகளும்;
வெறுத்துப் போன வலிகளும்;
பழகிவிட்ட இவர்களுக்கும்
சேர்த்து நான் அழுகிறேன்;
வரவேண்டாம் என் பிள்ளைக்கு
ஒருக்காலமும் இதுப்போல்!

1 comment:

  1. அக்கறைக்கு இக்கரை என்றுமே பச்சை

    ReplyDelete