கறுப்பு மட்டும்



போடாதச் சோப்பு இல்லை
தடவாதக் கிரீம் இல்லை;
பளிச்சென்றுத் தெரியும்
கறுப்பு மட்டும்
வெண்மையாகச்
சிரித்துக்கொண்டு!
       
ஒட்டியக் கறுப்பால்;
உறவினர்களிடம்
நான் ஒட்டாமல் நிற்க;
அழுதுப் புலம்பினாலும்;

சிவக்க - மாற்று
நிறம் இல்லாததால்;
சிவந்த விழிகளுடன்;
உண்ணவில்லையா;
குங்குமப்பூவை என்று!
அன்னையிடம்
குங்க்ஃபூ காட்ட!
சிரித்துக் கொண்டேக்
கட்டியணைத்து நீயோ
கருணை மனு நீட்ட!

மா நிறம் என்று
நீ வாய்க்கூசாமல்
உரைத்தப் பொய்யிற்கு மயங்கி;
கண்கூசாமல்
கண்ணாடி முன் நான்;
ஒரு வேளை
உண்மையாக இருக்குமோ
என்றெண்ணி!


போடாதச் சோப்பு இல்லை
தடவாதக் கிரீம் இல்லை;
பளிச்சென்றுத் தெரியும்
கறுப்பு மட்டும்
வெண்மையாகச்
சிரித்துக்கொண்டு!
       
ஒட்டியக் கறுப்பால்;
உறவினர்களிடம்
நான் ஒட்டாமல் நிற்க;
அழுதுப் புலம்பினாலும்;

சிவக்க - மாற்று
நிறம் இல்லாததால்;
சிவந்த விழிகளுடன்;
உண்ணவில்லையா;
குங்குமப்பூவை என்று!
அன்னையிடம்
குங்க்ஃபூ காட்ட!
சிரித்துக் கொண்டேக்
கட்டியணைத்து நீயோ
கருணை மனு நீட்ட!

மா நிறம் என்று
நீ வாய்க்கூசாமல்
உரைத்தப் பொய்யிற்கு மயங்கி;
கண்கூசாமல்
கண்ணாடி முன் நான்;
ஒரு வேளை
உண்மையாக இருக்குமோ
என்றெண்ணி!

3 comments:

  1. கருப்பு மீது வெறுப்பு எதுக்கு?
    கருப்பு நிறம் உள்ளவர்கள் சிரிப்பது அழகு, அது போல் சிரிக்க முடியுமா வெள்ளையாக உள்ளவர்களால்

    ReplyDelete
  2. கவிதை மிக அருமை... நண்பரே...
    தன் குழந்தை எப்படி இருந்தாலும் அன்பு செலுத்தும் தாயன்பையும் வெளிப்படுத்தும் விதம்... சூப்பர்...

    ReplyDelete
  3. நண்பர் சூர்யாஜீவா அவர்களே; நான் சொல்ல வந்தக் கருத்தை நண்பர் ராஜா அவர்கள் சரியாக புரிந்துக்கொண்டுள்ளார்.

    ReplyDelete