தந்தை...


சிரித்து நீ பேசினாலும்;
ஏனோ;
சில விஷயம்
அன்னையின் செவிக்கு
மட்டும் செல்லும்
என் விண்ணப்பம்!

பள்ளிச் செல்ல
மறுக்கும் எனை;
விழிகளால் விரட்டி;
விரல்களால் மிரட்டி;
அகத்தினில் சிரித்து
புறத்தினில் வெடிப்பாய்;
நான் நகர்ந்தப் பின்னே
அன்னையிடம் கூறி
நகைப்பாய்!

நினைவுப் படுத்தாதச் 
சரித்திரத்தில்;
நீங்கா இடம் உனக்கு உண்டு!
ஒளிரும் என் வெற்றிக்குள்
ஒளிந்திருக்கும் உன் தியாகம்!

சிரித்து நீ பேசினாலும்;
ஏனோ;
சில விஷயம்
அன்னையின் செவிக்கு
மட்டும் செல்லும்
என் விண்ணப்பம்!

பள்ளிச் செல்ல
மறுக்கும் எனை;
விழிகளால் விரட்டி;
விரல்களால் மிரட்டி;
அகத்தினில் சிரித்து
புறத்தினில் வெடிப்பாய்;
நான் நகர்ந்தப் பின்னே
அன்னையிடம் கூறி
நகைப்பாய்!

நினைவுப் படுத்தாதச் 
சரித்திரத்தில்;
நீங்கா இடம் உனக்கு உண்டு!
ஒளிரும் என் வெற்றிக்குள்
ஒளிந்திருக்கும் உன் தியாகம்!

8 comments:

  1. மிக அழகான
    ஆழமான
    உணர்வுகலந்த

    கவிதை அருமை

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வாழ்த்துக்கள் இது வரை இந்த வலை என் கண்ணில் தென்படவே இல்லை
    கவிதைக்கேற்ற போட்டோவும், கவிதையும் மிக அருமை

    http://samaiyalattakaasam.blogspot.com/2011/09/blog-post_06.html

    ReplyDelete
  3. பல முறை முயன்று கமெண்ட் போட வேமுடியல

    ReplyDelete
  4. முனைவர் அவர்களுக்கு, ஆழமானக் கருத்தைத் தெரிந்துக் கொண்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ஜலீலா கமால் அவர்களே; வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தினமும் என் வலையை பார்வை இடவும்.

    ReplyDelete
  6. அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

    சகோதரர் யாசர் அரஃபாத் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

    மாஷா அல்லாஹ்!
    படத்தை கண்டதும் கவிதை!
    நடக்கும் நிகழ்வை கண்டதும் கவிதை!
    காட்சிக் கவிதை!
    பிரிவு கவிதை!
    வளைகுடா வாழ்வின் அவலத்தைப் பற்றிய கவிதை!
    இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். . .

    தங்களின் தூய தமிழ் கவிதைகளை நிறைய வாசித்திருக்கிறேன். அனைத்தையும் அல்ல எத்தனை என்று ஞாபகம் இல்லை.
    எல்லாவற்றையும் படிக்காததால் மார்க்கத்திற்கு முரணில்லாத கவிதைகளை மட்டும் வரவேற்கிறேன்.

    தங்களுக்கு வற்றாத கவிதை ஞானத்தை வழங்கிய இம்மை மறுமையின் அதிபதியான வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!

    ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

    சகோதரன் அலாவுதீன் S.

    ReplyDelete
  7. வலைக்கும் ஸலாம்,
    சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி!இதுவரை மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில்தான் கவிதை எழுதி வருகிறேன்;என்னையும் மீறி ஏதேனும் வெளிப்பட்டு இருந்தால் உடனே தெரிவிக்கவும்.
    இன்ஷா அல்லாஹ் ,
    சிறந்த புகைப்படமோ,சிறந்த தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும்.itzyasa@gmail.com

    ReplyDelete