முடியல..


களைப்பார நான்
கண்கள் மூடினால்;
என்னோடு நீ
கண்ணாமூச்சி ஆட;
மூட்டை முடிச்சுடன்
பாலையில் குடி வந்திருக்கும்
என் மூட்டையோடு மூட்டையாக!

இரத்தம் உறிஞ்சும்
வளைகுடாவில்;
என் நித்திரையிலும்
நித்தம் நீ
இரத்தம் உறிய;
இரத்தத்தானம் மறந்த எனக்கு;
நீ கற்றுக்கொடுக்கும் பாடம்!

மருந்து வைத்தாலும்
மயக்கிச் செல்கிறாய்;
ஒதுங்கிப்படுத்தாலும்
உறவாட வருகிறாய்;
அலுத்துப்போன எனக்கு;
உன்னோடுச் சண்டையிடத்
திராணியில்லை – உன்
சத்துக்கு நான் தீனியில்லை!

களைப்பார நான்
கண்கள் மூடினால்;
என்னோடு நீ
கண்ணாமூச்சி ஆட;
மூட்டை முடிச்சுடன்
பாலையில் குடி வந்திருக்கும்
என் மூட்டையோடு மூட்டையாக!

இரத்தம் உறிஞ்சும்
வளைகுடாவில்;
என் நித்திரையிலும்
நித்தம் நீ
இரத்தம் உறிய;
இரத்தத்தானம் மறந்த எனக்கு;
நீ கற்றுக்கொடுக்கும் பாடம்!

மருந்து வைத்தாலும்
மயக்கிச் செல்கிறாய்;
ஒதுங்கிப்படுத்தாலும்
உறவாட வருகிறாய்;
அலுத்துப்போன எனக்கு;
உன்னோடுச் சண்டையிடத்
திராணியில்லை – உன்
சத்துக்கு நான் தீனியில்லை!

1 comment:

  1. மூட்டை பூச்சிக்கு ஒரு கவிதையா... நல்லா இருந்துச்சு

    ReplyDelete