பழையது இனியது



சிறு வயதில்
சில்மிஷம் செய்த;
ஒத்த வயதுச்
சுட்டி நண்பன்;
என்னை மாற்றி;
மாட்டி விட்டதால்;
சினத்தில் துவம்சம் செய்ய;
அம்சம் பொருந்திய
அன்னையின் அடிக்கு
நான் பலியாய்!

பள்ளிப் பருவத்தில்;
கிள்ளி விளையாடும்
அன்பு நண்பர்களால்;
தவறாகக் கணித்த;
கணக்கு வாத்தியாரின்
மெலிந்தப் பிரம்பால்
தடித்த என் தசைகளோடு;
படித்தாலும் அவருக்கு;
நான் மக்கு பிள்ளையாய்!

பழுத்த நினைவுகளை
நினைத்துப் பார்க்கையிலே;
நனையும் கண்கள்;
நண்பர்கள் சொல்லிச்
சிரிக்கையிலே!


சிறு வயதில்
சில்மிஷம் செய்த;
ஒத்த வயதுச்
சுட்டி நண்பன்;
என்னை மாற்றி;
மாட்டி விட்டதால்;
சினத்தில் துவம்சம் செய்ய;
அம்சம் பொருந்திய
அன்னையின் அடிக்கு
நான் பலியாய்!

பள்ளிப் பருவத்தில்;
கிள்ளி விளையாடும்
அன்பு நண்பர்களால்;
தவறாகக் கணித்த;
கணக்கு வாத்தியாரின்
மெலிந்தப் பிரம்பால்
தடித்த என் தசைகளோடு;
படித்தாலும் அவருக்கு;
நான் மக்கு பிள்ளையாய்!

பழுத்த நினைவுகளை
நினைத்துப் பார்க்கையிலே;
நனையும் கண்கள்;
நண்பர்கள் சொல்லிச்
சிரிக்கையிலே!

2 comments:

  1. ஒருவரின் வலி சிறைக்கு நகைச்சுவையாய் மாறும் தருணம் அழகாக செதுக்கி இருக்கிறீர்கள் வார்த்தைகளில்

    ReplyDelete
  2. ஒருவரின் வலி சிலருக்கு நகைச்சுவையாய் மாறும் தருணம் அழகாக செதுக்கி இருக்கிறீர்கள் வார்த்தைகளில்

    ReplyDelete