வேண்டாம் நம் பிள்ளைக்கு



சேர்ந்து வாழும் காலத்தில்
சோர்ந்துப் போய்
தனிமையில் நீயும் நானும்;
அங்கலாய்க்கும் 
வயதின் கதறலை
வாய் மூடி விழிப்பிதிங்கி;
வழியனுப்புவிட்டேன்!   

படுத்து உருள
பஞ்சு மெத்தையும்;
உடுத்தி மகிழ
பட்டுப்புடவையும்;
வாழ்ந்து மகிழ
வசதியாய் வீடும் 
உனக்கு தந்து மகிழ்ந்தேன்!

தேவை எனும் தேடுதலுக்குப்
பாலையில் பலியாகி;
இப்போது;
கன்னம் குழியாகி;
முடியோ நரையாகி;
உன் முன்னே!

தேம்பி அழ 
தெம்பில்லாமல்;
சாய்ந்துக் கொள்கிறேன்
உன் மேனியில்;
சபதம் கொண்டேன்
இனியொரு புலம்பல்
வேண்டாம் நம் பிள்ளைக்கு!


சேர்ந்து வாழும் காலத்தில்
சோர்ந்துப் போய்
தனிமையில் நீயும் நானும்;
அங்கலாய்க்கும் 
வயதின் கதறலை
வாய் மூடி விழிப்பிதிங்கி;
வழியனுப்புவிட்டேன்!   

படுத்து உருள
பஞ்சு மெத்தையும்;
உடுத்தி மகிழ
பட்டுப்புடவையும்;
வாழ்ந்து மகிழ
வசதியாய் வீடும் 
உனக்கு தந்து மகிழ்ந்தேன்!

தேவை எனும் தேடுதலுக்குப்
பாலையில் பலியாகி;
இப்போது;
கன்னம் குழியாகி;
முடியோ நரையாகி;
உன் முன்னே!

தேம்பி அழ 
தெம்பில்லாமல்;
சாய்ந்துக் கொள்கிறேன்
உன் மேனியில்;
சபதம் கொண்டேன்
இனியொரு புலம்பல்
வேண்டாம் நம் பிள்ளைக்கு!

7 comments:

  1. எல்லோரின் ஆசையும் அதுதான் நண்பரே !

    ReplyDelete
  2. நிதர்சனம் நண்பரே

    ReplyDelete
  3. நன்றி சீனி அவர்களே..

    ReplyDelete
  4. வலைச்சரம் வாங்க
    http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அல்லைக்கும் சகோ//
    நலமாக இருக்கின்றீர்களா?தங்கள் வலைப்பூ பக்கத்திற்க்கு இன்று வர முயன்றது.
    இந்த வேண்டாம் நம் பிள்ளைக்கு கவிதை கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது சகோ///
    இந்த கொடுமை நம்மில் தொடரதான் செய்கிறது.
    இப்படி ஒரு நிலமை யாருக்கு ஏற்படாத நிலையை தான் இறைவன் நம்மீது விதிக்க வேண்டுகிறேன்.
    உண்மையில் உங்களுடைய கவிதைகள் அர்த்தமுள்ள கவிதைகளாகவே வலம் வருகின்றது.
    வாழ்த்துக்கள் சகோ///
    இன்னும் உங்கள் முழு பக்கத்தையும் படித்து ரசித்துவிட்டு என் கருத்தினை பகிர்ந்து கொள்கின்றேன் சகோ//

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  6. வலைக்கும் சலாம் அப்சரா அவர்களே, உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களின் அப்சராவின் இல்லம் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete