எச்ச அறிக்கை


லட்சத்தில் நகை விற்று;
ரொக்கத்தைச் சொச்சமாக்கி;
மிச்சத்தைத் தவணையாக்கி;
பொன்னானப் பெண்களிடம்
புன்னகையைப் பரிசாக்கி
வழியனுப்புவான்;

சாதி மதப் பேதமின்றி;
சாத்தானியச் சாட்டையால்
சாமரம் வீசி;
அழகானப் பெண்களை அழவைப்பான்;
திடீரென்று மிச்சத்தைக் கேட்டு
மிரளவைப்பான்;

குடும்பத்தைக் கரைச் சேர்க்க;
கரைத் தாண்டியக்
கணவன்மார்களின்
மனைவிமார்களைப்
படித் தாண்டவைப்பான்;
மிச்சத்தைக் கேட்டு;
எச்சமாக்கத் துடிப்பான்!

நகையை வியாபாரமாக்கி;
நங்கையை விபச்சாரியாக்கி;
பொறுக்கி எடுத்த நகைக்கடையின்
பொருக்கி இவன்;
சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன்!

லட்சத்தில் நகை விற்று;
ரொக்கத்தைச் சொச்சமாக்கி;
மிச்சத்தைத் தவணையாக்கி;
பொன்னானப் பெண்களிடம்
புன்னகையைப் பரிசாக்கி
வழியனுப்புவான்;

சாதி மதப் பேதமின்றி;
சாத்தானியச் சாட்டையால்
சாமரம் வீசி;
அழகானப் பெண்களை அழவைப்பான்;
திடீரென்று மிச்சத்தைக் கேட்டு
மிரளவைப்பான்;

குடும்பத்தைக் கரைச் சேர்க்க;
கரைத் தாண்டியக்
கணவன்மார்களின்
மனைவிமார்களைப்
படித் தாண்டவைப்பான்;
மிச்சத்தைக் கேட்டு;
எச்சமாக்கத் துடிப்பான்!

நகையை வியாபாரமாக்கி;
நங்கையை விபச்சாரியாக்கி;
பொறுக்கி எடுத்த நகைக்கடையின்
பொருக்கி இவன்;
சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன்!

3 comments:

  1. உணர்வு பூர்வமான வரிகள். தங்கத்தின் விலைகள் ஏறிக்கொண்டே போகிற வேலையில் இப்படி ஒரு கவி வரிகள். அருமை பாராட்டுக்கள்.
    www.panangoor.blogspot.com

    ReplyDelete
  2. நல்லதொரு கவிதை

    ReplyDelete
  3. மிகவும் அருமையான கவிதை தலைப்பே ஈர்க்கிறது..

    ReplyDelete