வந்து விடுகிறேன்



அழும் உன் குரலை
ஆழ் மனதில்
பிதைத்துவிட்டு;
இறுதியாய் உனை
ஒருமுறை
திரும்பிப்பார்த்து;
விரும்பிப்பார்த்து;
விடைபெற்றேன்;
நம் சோகத்திற்கு
வினா தந்தேன்!

சூடான உள்ளத்திற்குப்
போட்டியாய்;
வாட்டி எடுக்கும் வெயிலும்;
போட்டுப் புரட்டும்
உன் நினைவும் இங்கே!

வளைகுடாவில்
புது மாப்பிள்ளை
என எல்லோரும் நகைக்க – பின்
அனுபவம் கொண்டவர்கள்
புரிந்துக்கொண்டு எனை அணைக்க!

தனிமையோடுத் தள்ளாடி;
கண்ணீர்த் துளிகள்
தவணைமுறையில்
தினமும் தலையணையிற்கு;
இரவு முழுவதும்!


அழும் உன் குரலை
ஆழ் மனதில்
பிதைத்துவிட்டு;
இறுதியாய் உனை
ஒருமுறை
திரும்பிப்பார்த்து;
விரும்பிப்பார்த்து;
விடைபெற்றேன்;
நம் சோகத்திற்கு
வினா தந்தேன்!

சூடான உள்ளத்திற்குப்
போட்டியாய்;
வாட்டி எடுக்கும் வெயிலும்;
போட்டுப் புரட்டும்
உன் நினைவும் இங்கே!

வளைகுடாவில்
புது மாப்பிள்ளை
என எல்லோரும் நகைக்க – பின்
அனுபவம் கொண்டவர்கள்
புரிந்துக்கொண்டு எனை அணைக்க!

தனிமையோடுத் தள்ளாடி;
கண்ணீர்த் துளிகள்
தவணைமுறையில்
தினமும் தலையணையிற்கு;
இரவு முழுவதும்!

வர வேண்டாம்



வெற்று அறையில்
ஒற்றையாய் நின்று
உனக்குப் பிடித்த
வாசனைத் திரவியத்தை
நான் வாசம் பிடித்து!

கழட்டிவைத்த உன்
அழுக்குச் சட்டையை
இறுக்கப் பிடித்து;
நீர் கோர்த்த
விழிகள் இரண்டையும்
இமைகள் பிசைந்து;
குலுங்கி அழும்போதுக்
கூடவே மூக்கும் சேர்ந்து!

நீ நாடுவிட்டு நாடுச்
செல்வதால்;
நாதியற்று விசாலமான
அறையில் நான் ஓரமாய்;

சிவந்த விழியும்
சிந்திய மூக்கும் கண்டு;
அம்மாவும் அக்காவும்
அணைத்து ஆறுதல் அரும்பும்;
அனுபவம் உரைக்கும்;
இப்படித்தான் கொஞ்சக்காலம்
இருக்குமென்று!

மரத்துப்போனத் தழும்புகளும்;
வெறுத்துப் போன வலிகளும்;
பழகிவிட்ட இவர்களுக்கும்
சேர்த்து நான் அழுகிறேன்;
வரவேண்டாம் என் பிள்ளைக்கு
ஒருக்காலமும் இதுப்போல்!


வெற்று அறையில்
ஒற்றையாய் நின்று
உனக்குப் பிடித்த
வாசனைத் திரவியத்தை
நான் வாசம் பிடித்து!

கழட்டிவைத்த உன்
அழுக்குச் சட்டையை
இறுக்கப் பிடித்து;
நீர் கோர்த்த
விழிகள் இரண்டையும்
இமைகள் பிசைந்து;
குலுங்கி அழும்போதுக்
கூடவே மூக்கும் சேர்ந்து!

நீ நாடுவிட்டு நாடுச்
செல்வதால்;
நாதியற்று விசாலமான
அறையில் நான் ஓரமாய்;

சிவந்த விழியும்
சிந்திய மூக்கும் கண்டு;
அம்மாவும் அக்காவும்
அணைத்து ஆறுதல் அரும்பும்;
அனுபவம் உரைக்கும்;
இப்படித்தான் கொஞ்சக்காலம்
இருக்குமென்று!

மரத்துப்போனத் தழும்புகளும்;
வெறுத்துப் போன வலிகளும்;
பழகிவிட்ட இவர்களுக்கும்
சேர்த்து நான் அழுகிறேன்;
வரவேண்டாம் என் பிள்ளைக்கு
ஒருக்காலமும் இதுப்போல்!

இனிமையான இரவு



உழைத்துக் களைத்த
விழிகள்; 
இமைகளுக்குள்ளே
ஓளிந்துக்கொண்டு!

ஆடி அசைந்த
உடல் உறுப்புகள்
அமைதியாய்
அடக்கம் கண்டு!

சிந்திக்கும் மூளையைச்
சிறைப்பிடித்து;
சிந்தும் தேனாய்;
கொட்டும் தேளாய்;
உருவெடுக்கும் நாவிற்கும்
ஓய்வுக்கொடுத்து!

திறந்திருந்தாலும்
செவிடாய் செவிகள்;
அடைப்புகள் இல்லாவிடினும்;
வாசணைகள் அடைப்படாமல்
அமைதியாய்!

கனமான மேனியும்
கனமற்று;
உறக்கத்தில் கவனமற்று;
இறைவன் கொடுத்த
வெகுமதி மனிதருக்கும்
மாந்தருக்கும்!


உழைத்துக் களைத்த
விழிகள்; 
இமைகளுக்குள்ளே
ஓளிந்துக்கொண்டு!

ஆடி அசைந்த
உடல் உறுப்புகள்
அமைதியாய்
அடக்கம் கண்டு!

சிந்திக்கும் மூளையைச்
சிறைப்பிடித்து;
சிந்தும் தேனாய்;
கொட்டும் தேளாய்;
உருவெடுக்கும் நாவிற்கும்
ஓய்வுக்கொடுத்து!

திறந்திருந்தாலும்
செவிடாய் செவிகள்;
அடைப்புகள் இல்லாவிடினும்;
வாசணைகள் அடைப்படாமல்
அமைதியாய்!

கனமான மேனியும்
கனமற்று;
உறக்கத்தில் கவனமற்று;
இறைவன் கொடுத்த
வெகுமதி மனிதருக்கும்
மாந்தருக்கும்!

பொய் கவிஞன்



மெய்யை மரணமாக்கி;
பொய்யிற்கு மை ஊற்றி;
மயில் இறகால்
மனைதை வருடிவிட்டு;
நடவாத விஷயத்திற்கு
நடையிட்டு;
வரிகள் விழிகளில் விழுந்து;
மனதை அரித்து;
நடக்குமா நடக்காதா
சிந்தனைச் செய்யும்
மூளையைக் கரித்து;
புல்லரிக்கிறது என
புலங்காயிதம் செய்யும்
பாமரன்!


மெய்யை மரணமாக்கி;
பொய்யிற்கு மை ஊற்றி;
மயில் இறகால்
மனைதை வருடிவிட்டு;
நடவாத விஷயத்திற்கு
நடையிட்டு;
வரிகள் விழிகளில் விழுந்து;
மனதை அரித்து;
நடக்குமா நடக்காதா
சிந்தனைச் செய்யும்
மூளையைக் கரித்து;
புல்லரிக்கிறது என
புலங்காயிதம் செய்யும்
பாமரன்!

இடம் தாவி



இடம் தாவி வந்த;
இனம் புரியா
இனமொன்று கனமான
மனதுடன்;
விடயம் இல்லாமல்
தடையத்தைத்
தடவியப்படி;
ரணமான உள்ளம்
குணமாகாதா என
ஏங்கியப்படிச்
சற்றுத் தூங்கியப்படி;
பெருநாளுக்கு நீ எழுப்பாமல்
நான் எழுந்து குளித்து
நறுமணம் மணக்க;
வாழ்த்துக்கள் தெளிக்க;
சிரித்து நடந்தாலும்
சில்லென்று விழிகளின்
ஓரம் கொஞ்சம் ஈரமாய்!

சந்தோஷங்கள்
அலைப்பேசியில்
அறுவடைச் செய்ய;
அறுத்தெடுக்கும் குரல்;
அம்மாவின் ஈரக்குலை
என்ற ஒற்றைப் பாசச் சொல்!

என்ன ஆடை;
என்ன வண்ணம்;
கேட்டுக் கேட்டு;
செவிக்குப் புளித்தாலும்
இளித்துக் கொண்டே
மீண்டும் மீண்டும் கேட்கச்
சொல்லும் உறவுகளின்
உற்சாகத்தைக் கேட்டு;
மனம் குளிர!


இடம் தாவி வந்த;
இனம் புரியா
இனமொன்று கனமான
மனதுடன்;
விடயம் இல்லாமல்
தடையத்தைத்
தடவியப்படி;
ரணமான உள்ளம்
குணமாகாதா என
ஏங்கியப்படிச்
சற்றுத் தூங்கியப்படி;
பெருநாளுக்கு நீ எழுப்பாமல்
நான் எழுந்து குளித்து
நறுமணம் மணக்க;
வாழ்த்துக்கள் தெளிக்க;
சிரித்து நடந்தாலும்
சில்லென்று விழிகளின்
ஓரம் கொஞ்சம் ஈரமாய்!

சந்தோஷங்கள்
அலைப்பேசியில்
அறுவடைச் செய்ய;
அறுத்தெடுக்கும் குரல்;
அம்மாவின் ஈரக்குலை
என்ற ஒற்றைப் பாசச் சொல்!

என்ன ஆடை;
என்ன வண்ணம்;
கேட்டுக் கேட்டு;
செவிக்குப் புளித்தாலும்
இளித்துக் கொண்டே
மீண்டும் மீண்டும் கேட்கச்
சொல்லும் உறவுகளின்
உற்சாகத்தைக் கேட்டு;
மனம் குளிர!