விருந்து வைத்து
விடைக்கொடுத்து;
விட்டுப்பிரிந்து உன்
கண்ணீரைத் தொட்டுவிட்டு;
கரம் அசைத்து;
மரக்கட்டையாக
மகிழுந்தில் நான்!
நீ அழுதக் கடிதங்கள்
என் விரல் பிடிக்க;
நண்பர்களுக்கு வெட்கப்பட்டுக்
கண்களிலேக் கரைந்துவிடும்
என் கண்ணீர்!
சோகங்களைச்
சோர்வடையச் செய்ய;
என்னைப் போலவே
ஏக்கத்துடன்;
கூட்டத்துடன் தனிமையில்
சுதந்திரச் சிறை
அறை நண்பர்கள்!
கேலியும் கிண்டலும்;
அழுது வடியும் மனதை;
ஆசுவாசப்படுத்த!
அமைதியைக் கக்கும்
இரவோ என் இருதயத்தை
கசக்கிப்பிழிய;
சப்தமில்லாமல் சரணடையும்
என் கண்ணீர் தலையணைக்கு!
உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும் எங்கள் வளைகுடா வாழ்க்கையின் பிரதிபலிப்பு..
ReplyDeleteஉங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும் எங்கள் வளைகுடா வாழ்க்கையின் பிரதிபலிப்பு..
ReplyDeleteநிஜமாகவே புல்லரிக்குது நண்பா....
ReplyDeleteமுழுக்க முழுக்க உண்மை!!
கேலியும் கிண்டலும்;
ReplyDeleteஅழுது வடியும் மனதை;
ஆசுவாசப்படுத்த!
அமைதியைக் கக்கும்
இரவோ என் இருதயத்தை
கசக்கிப்பிழிய;
சப்தமில்லாமல் சரணடையும்
என் கண்ணீர் தலையணைக்கு!
ரசத்தேன் இவ்வரிகளை அருமை
ஆமாம் அதே வரிகள் தான் என்னையும் சிலிர்க்க வைத்தன....
ReplyDeleteமிக அருமை...
ஹலோ யாசர் உங்களின் இந்த பக்கம் bookmark செய்யப்பட்டது...