அடிச் செருப்பாலே!


கற்கை நன்றே;
கற்கை நன்றே;
பிச்சைபுகினும்
கற்கை நன்றே;
இல்லை இல்லை
கற்கை நன்றே;
கற்கை நன்றே;
கற்றதைக் கொண்டு
மணாளனை
விற்பது நன்றே!

பிச்சைப் பெறத்
தடுக்கப் பள்ளிப்
பட்டம் பெறவேண்டுமடா;
நீயோ;
பெற்றப் பட்டம் கொண்டு;
பிச்சைக் கேட்க
வந்தாயடா!

மென்றுத் திண்ணும்
உன் உறவிற்கு
நான் என்ன பலி ஆடா;
தினைக்கூலியாய்
இருந்தாலும் பரவாயில்லை;
முதலில் கரம் கொடுக்க
என் விரல் தலைமைத்
தாங்குமடா;
கைக்கூலி கேட்டு நீ வந்தால்;
என் விழி;
செருப்பைத் தேடுமடா!

கற்கை நன்றே;
கற்கை நன்றே;
பிச்சைபுகினும்
கற்கை நன்றே;
இல்லை இல்லை
கற்கை நன்றே;
கற்கை நன்றே;
கற்றதைக் கொண்டு
மணாளனை
விற்பது நன்றே!

பிச்சைப் பெறத்
தடுக்கப் பள்ளிப்
பட்டம் பெறவேண்டுமடா;
நீயோ;
பெற்றப் பட்டம் கொண்டு;
பிச்சைக் கேட்க
வந்தாயடா!

மென்றுத் திண்ணும்
உன் உறவிற்கு
நான் என்ன பலி ஆடா;
தினைக்கூலியாய்
இருந்தாலும் பரவாயில்லை;
முதலில் கரம் கொடுக்க
என் விரல் தலைமைத்
தாங்குமடா;
கைக்கூலி கேட்டு நீ வந்தால்;
என் விழி;
செருப்பைத் தேடுமடா!

முக்கும் முதுமை


வறுமைக்கு அடிப்பட்டு
வளைகுடாவிற்கு
வாக்கப்பட்டு;
கரம் பிடித்த உன்னை
கண்ணீரோடு விட்டுவிட்டு;
தலையணைக்குத் துணையாய்;
தனிமைக்கு இணையாய்;
நான் இங்கே!

வருடத்திற்கு ஒரு முறை
வந்துப்போய்;
வந்துப்போகும் மாதத்தில்
உன் மனதைக் கொண்டுபோய்;
உண்டான உனக்கு
அறிவுறைகள் அழகாய்
கைப்பேசியில்!

புதுமணத் தம்பதிக் காலத்தில்
கடல் கடந்து வரும்
உன் கடிதத்திற்கு
இமையோடுச் சேர்ந்து என்
இதயமும் காத்திருக்கும்!

காலங்கள் ஓடியப்பின்னே;
இளைமை வறண்டப்பின்னே;
உன் மடலோடு
மருந்துக்காகக் காத்திருக்கும்
என் ஆரோக்கியம்!

ஓடி ஆடும் வயதில்
ஒதுக்குப்புறமாய்
நீயும் நானும்;
ஆடி அடங்கும் வயதில்
வந்திருக்கிறேன் உன் அருகில்;
வளைகுடாவிற்கு
வயது ஒத்துழைக்காததால்!

வறுமைக்கு அடிப்பட்டு
வளைகுடாவிற்கு
வாக்கப்பட்டு;
கரம் பிடித்த உன்னை
கண்ணீரோடு விட்டுவிட்டு;
தலையணைக்குத் துணையாய்;
தனிமைக்கு இணையாய்;
நான் இங்கே!

வருடத்திற்கு ஒரு முறை
வந்துப்போய்;
வந்துப்போகும் மாதத்தில்
உன் மனதைக் கொண்டுபோய்;
உண்டான உனக்கு
அறிவுறைகள் அழகாய்
கைப்பேசியில்!

புதுமணத் தம்பதிக் காலத்தில்
கடல் கடந்து வரும்
உன் கடிதத்திற்கு
இமையோடுச் சேர்ந்து என்
இதயமும் காத்திருக்கும்!

காலங்கள் ஓடியப்பின்னே;
இளைமை வறண்டப்பின்னே;
உன் மடலோடு
மருந்துக்காகக் காத்திருக்கும்
என் ஆரோக்கியம்!

ஓடி ஆடும் வயதில்
ஒதுக்குப்புறமாய்
நீயும் நானும்;
ஆடி அடங்கும் வயதில்
வந்திருக்கிறேன் உன் அருகில்;
வளைகுடாவிற்கு
வயது ஒத்துழைக்காததால்!

கறை நல்லது


கின்னியிலுள்ள 
சுடும் குழம்பு
உன் கரம் சுட;
தடுமாறி என் சட்டையில்
தடம் பதிக்க;
அச்சத்தோடு மிச்சப்பார்வையை
என் மீது நீ செலுத்த;
பரவாயில்லை என்று
புன்னகையை உனக்குப்
போர்வையாக்க;
புதைந்துக்கிடந்த நம்
அன்பு  இடம்மாறுவதற்கு   
சூழலை தந்த
கறை நல்லது!
 
கொஞ்சலோடு  விளையாடும்
நம் பிள்ளை என் ஆடையை
சூடாக நனைக்க;
சுற்றியுள்ள சொந்தங்கள் 
கேலியோடு என்னை 
குதுகலப்படுத்தும் 
கறை நல்லது!

கின்னியிலுள்ள 
சுடும் குழம்பு
உன் கரம் சுட;
தடுமாறி என் சட்டையில்
தடம் பதிக்க;
அச்சத்தோடு மிச்சப்பார்வையை
என் மீது நீ செலுத்த;
பரவாயில்லை என்று
புன்னகையை உனக்குப்
போர்வையாக்க;
புதைந்துக்கிடந்த நம்
அன்பு  இடம்மாறுவதற்கு   
சூழலை தந்த
கறை நல்லது!
 
கொஞ்சலோடு  விளையாடும்
நம் பிள்ளை என் ஆடையை
சூடாக நனைக்க;
சுற்றியுள்ள சொந்தங்கள் 
கேலியோடு என்னை 
குதுகலப்படுத்தும் 
கறை நல்லது!

புரியாதத் தருணம்


உணர்ச்சிகளின் சுரணையும்
அவ்வபோது செத்துப் போக;
இணையத்தில் நம்மை
இணைக்கக் கைப்பேசி அலற!

எல்லோரிடம் பேச
பாசமாகக் கைப்பேசியைக்
கொடு என்றாலும்;
விளங்காதக் குரலுக்கு
விளங்கியதுப்போல் ம்ம் போட;

உனையன்றி யாருக்கும்
விளங்காத என் மொழி;
உறவினர்கள் எல்லாம்
முகம் சுளித்து – மீண்டும்
உன் கரம் திணித்து;
பேச்சு புரியவில்லை என்பர்;

VOIP என்று
பெயரிட்டாலும்
VOICE க்கு மட்டுமே
வாய்ப்பு;
மனதிற்கு என்றுமே
தீ வைப்பு!

உணர்ச்சிகளின் சுரணையும்
அவ்வபோது செத்துப் போக;
இணையத்தில் நம்மை
இணைக்கக் கைப்பேசி அலற!

எல்லோரிடம் பேச
பாசமாகக் கைப்பேசியைக்
கொடு என்றாலும்;
விளங்காதக் குரலுக்கு
விளங்கியதுப்போல் ம்ம் போட;

உனையன்றி யாருக்கும்
விளங்காத என் மொழி;
உறவினர்கள் எல்லாம்
முகம் சுளித்து – மீண்டும்
உன் கரம் திணித்து;
பேச்சு புரியவில்லை என்பர்;

VOIP என்று
பெயரிட்டாலும்
VOICE க்கு மட்டுமே
வாய்ப்பு;
மனதிற்கு என்றுமே
தீ வைப்பு!

எச்ச அறிக்கை


லட்சத்தில் நகை விற்று;
ரொக்கத்தைச் சொச்சமாக்கி;
மிச்சத்தைத் தவணையாக்கி;
பொன்னானப் பெண்களிடம்
புன்னகையைப் பரிசாக்கி
வழியனுப்புவான்;

சாதி மதப் பேதமின்றி;
சாத்தானியச் சாட்டையால்
சாமரம் வீசி;
அழகானப் பெண்களை அழவைப்பான்;
திடீரென்று மிச்சத்தைக் கேட்டு
மிரளவைப்பான்;

குடும்பத்தைக் கரைச் சேர்க்க;
கரைத் தாண்டியக்
கணவன்மார்களின்
மனைவிமார்களைப்
படித் தாண்டவைப்பான்;
மிச்சத்தைக் கேட்டு;
எச்சமாக்கத் துடிப்பான்!

நகையை வியாபாரமாக்கி;
நங்கையை விபச்சாரியாக்கி;
பொறுக்கி எடுத்த நகைக்கடையின்
பொருக்கி இவன்;
சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன்!

லட்சத்தில் நகை விற்று;
ரொக்கத்தைச் சொச்சமாக்கி;
மிச்சத்தைத் தவணையாக்கி;
பொன்னானப் பெண்களிடம்
புன்னகையைப் பரிசாக்கி
வழியனுப்புவான்;

சாதி மதப் பேதமின்றி;
சாத்தானியச் சாட்டையால்
சாமரம் வீசி;
அழகானப் பெண்களை அழவைப்பான்;
திடீரென்று மிச்சத்தைக் கேட்டு
மிரளவைப்பான்;

குடும்பத்தைக் கரைச் சேர்க்க;
கரைத் தாண்டியக்
கணவன்மார்களின்
மனைவிமார்களைப்
படித் தாண்டவைப்பான்;
மிச்சத்தைக் கேட்டு;
எச்சமாக்கத் துடிப்பான்!

நகையை வியாபாரமாக்கி;
நங்கையை விபச்சாரியாக்கி;
பொறுக்கி எடுத்த நகைக்கடையின்
பொருக்கி இவன்;
சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன்!