மன்னித்துவிடு


கறுத்த முடிகள்
நகைத்து வெளுத்து;
திமிர் கொண்டத் தோள்கள்
தளர்ந்துத் துவண்டு;
பளப்பளத்தத் தோல்கள்
பள்ளம் மேடுக் காட்சியோடு!

என்னோடு நீ
கழித்தக் காலம்;
எத்தனையோ முறை
உன் மனதை நான்
கிழித்தக் கோலம்;
நான் இழைத்தப் பிழைக்கு;
நீ கேட்ட மன்னிப்புகள்;
திரும்பிப் பார்த்தாலேத் 
திகைப்பாய்;
விழிகளுக்கு மலைப்பாய்!

வெட்கிக் குனிகிறேன்
வேதனையில்;
கர்வம் துடைத்து;
விழிகளால் விழைந்து;
மனதால் அழுது;
மன்னிப்புக்கேட்கிறேன்;
மணம் முடிக்க
மணக்கூலிக் கேட்டு
உறவை மாசுப்படுத்தியதற்கு;
அன்று நான்
உன் விழிகளைத்
தூசுத் தட்டியதற்கு!

கறுத்த முடிகள்
நகைத்து வெளுத்து;
திமிர் கொண்டத் தோள்கள்
தளர்ந்துத் துவண்டு;
பளப்பளத்தத் தோல்கள்
பள்ளம் மேடுக் காட்சியோடு!

என்னோடு நீ
கழித்தக் காலம்;
எத்தனையோ முறை
உன் மனதை நான்
கிழித்தக் கோலம்;
நான் இழைத்தப் பிழைக்கு;
நீ கேட்ட மன்னிப்புகள்;
திரும்பிப் பார்த்தாலேத் 
திகைப்பாய்;
விழிகளுக்கு மலைப்பாய்!

வெட்கிக் குனிகிறேன்
வேதனையில்;
கர்வம் துடைத்து;
விழிகளால் விழைந்து;
மனதால் அழுது;
மன்னிப்புக்கேட்கிறேன்;
மணம் முடிக்க
மணக்கூலிக் கேட்டு
உறவை மாசுப்படுத்தியதற்கு;
அன்று நான்
உன் விழிகளைத்
தூசுத் தட்டியதற்கு!

6 comments:

  1. //மணம் முடிக்க
    மணக்கூலிக் கேட்டு
    உறவை மாசுப்படுத்தியதற்கு;//

    மிக அருமையான வரிகள் சகோ

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. சூப்பர் ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  4. வாழ்த்துக்களை சூப்பராக சொன்ன தனபாலன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  5. கறுத்த முடிகள்
    நகைத்து வெளுத்து;


    நரைத்து என திருத்தி விடுங்கள் .கவிதையின் கரு அருமை .

    ReplyDelete
  6. அன்புள்ள நிலாமதி அவர்களுக்கு,

    உங்களின் சிறப்பான கருத்திற்கு மிக்க நன்றி; மேலும் நீங்கள் நகைத்து என்பதை நரைத்து என்பதாக மாற்றச் சொல்லி இருந்தீர்கள். நான் சரியாகத்தாம் பயன்படுத்தி இருப்பதாக எண்ணுகிறேன். காரணம் வெள்ளை முடியை நான் நகைத்து (நகைச்சுவைக்கு) என்பதாக உருவகப் படுத்தி உள்ளேன். வயதானாலே பொக்கையும் கன்னத்தில் குழியும் வரும் , மேலும் வெண்மையிற் புன்னகை என்பதாகவும் உருவகப்படுத்தி உள்ளேன். என்னுடைய கருத்தில் பிழை இருந்தால் தெரியப்படுத்தவும்.

    ReplyDelete