கதை சொல்லும் விழிகள்
கண்ணீர் கக்க;
விரல்களோ வழியை மறிக்க;
பிதிங்கியது இதழ்கள்!
உன் குரல் கேட்டு;
இதயத்தில் உரல் ஒன்று இடிக்க;
சப்தம் எழுப்பாதத்  
தொண்டையைக் 
கனைத்து;
வெறுப்பாய் உறுப்புகள் 
நெருப்பாய் உஷ்ணம் காட்ட;
ஒலிகள் உதறலோடு!
உன் நெருக்கமின்றி;
பல இரவுகள் உறக்கமின்றி;
உருண்டுப் படுக்க;
அறை நண்பர்கள்
குறை கேட்க;
ஒன்றுமில்லை என 
மென்று விழுங்க!
புது மாப்பிள்ளை 
எல்லோரும் கொஞ்ச;
தலையணை மட்டும் 
எனக்குத் தாலாட்டுப் பாட;
பாலையில் நான் 
கோழையாக!

veli naattla vaazhravanga!
ReplyDeletevaazhkai ith!?
arumai!
sonna vitham!