நம் இலக்கணம்..


தனிமையோடு முகம்வாடி;
என் உறவுகளோடு உறவாடி;
என் பிரிவால்
உன் மனம் வெறிச்சோடி;
தொலைவில் இருக்கும்
நமக்கு உறவாகத்
தொலைத் தொடர்பு!

அழும் குழந்தைக்கு
உணவூட்டி;
பள்ளிக்கு அனுப்ப;
அதற்கு நீ வழியனுப்ப;
ஓயாமல் ஓடும்
உன் தியாகம்!

மிகுந்துப்போன உணவுகள்
குப்பைக்குச் செல்லாமல்;
உன் இரைப்பையிற்குச் செலுத்தி;
சிக்கனம் பிடிக்கும்
உன் இலக்கணம்!

ஒழுக்கத்திற்கு
அழுக்கேற்றாமல்;
கற்பிற்குக்
கரைப் படியாமல்;
என் விடிப்பிற்கு
ஒயாமல் ஏங்கும்  
உன் விழிகளுக்காக
என் கற்பை விற்காமல்
காத்திருகிறேன்
உன்னைப்போலவே!

தனிமையோடு முகம்வாடி;
என் உறவுகளோடு உறவாடி;
என் பிரிவால்
உன் மனம் வெறிச்சோடி;
தொலைவில் இருக்கும்
நமக்கு உறவாகத்
தொலைத் தொடர்பு!

அழும் குழந்தைக்கு
உணவூட்டி;
பள்ளிக்கு அனுப்ப;
அதற்கு நீ வழியனுப்ப;
ஓயாமல் ஓடும்
உன் தியாகம்!

மிகுந்துப்போன உணவுகள்
குப்பைக்குச் செல்லாமல்;
உன் இரைப்பையிற்குச் செலுத்தி;
சிக்கனம் பிடிக்கும்
உன் இலக்கணம்!

ஒழுக்கத்திற்கு
அழுக்கேற்றாமல்;
கற்பிற்குக்
கரைப் படியாமல்;
என் விடிப்பிற்கு
ஒயாமல் ஏங்கும்  
உன் விழிகளுக்காக
என் கற்பை விற்காமல்
காத்திருகிறேன்
உன்னைப்போலவே!

3 comments:

  1. எல்லா கவிதைகளைப்போலவே இதுவும் ஒரு முத்து .
    Please add search box in this site to find out
    I have seen this poem
    இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே(written by you)
    in all sites but I am not able to find out in this site.
    Wassalam

    ReplyDelete
  2. சகோதரரே கவிதை அருமை தங்களின் தொடர்பு எண் தேவை pallivaasal.com@gmail.com

    ReplyDelete