இறுதி பிடி...


தொழுகை மறந்தக்
காலமும்;
உறவுகளை ஒதுக்கித்
தள்ளிய நேரமும்
நினைக்கையிலே;
குமுறும் நெஞ்சம்
மரணத்தைக் கண்டு
வெடித்து நிற்கிறது!

வறண்ட விழிகள்
வழியைப் பார்த்து நிற்க;
வலிக்கொண்ட மேனியோக்
கதறி நிற்க;
முட்டி மோதும் மூச்சியோத்
தொண்டைக்குழியை
குத்திக் கிழிக்க;
புரியாதப் பயம்
தொற்றிக்கொள்ள;
காரணமே அறியாமல்
கண்கள் நீர் சொரிய!

நிமிடங்களே எனத்
தெரிந்தப்பின்னும்;
கெஞ்சிக் கேட்கும் உள்ளம்;
இன்னொரு முறை
அவகாசம் கிடைக்காதா
என ஏங்கித் தவிக்கும் மனம்!

முந்தவும் செய்யா;
பிந்தவும் செய்ய;
மூச்சைப் பறிக்கும்
மரணம் வந்தப்பின்னே;
குமுறி அழுது என்னப் பயன்;

இருக்கும் காலம்
இறைவணக்கத்தை
இறுக்கப் பிடி;
இல்லையேல்
இறுதி நேரம்
இருக்காது
இலகுவாய்
இறைவனின்
இறுதிப்பிடி!

தொழுகை மறந்தக்
காலமும்;
உறவுகளை ஒதுக்கித்
தள்ளிய நேரமும்
நினைக்கையிலே;
குமுறும் நெஞ்சம்
மரணத்தைக் கண்டு
வெடித்து நிற்கிறது!

வறண்ட விழிகள்
வழியைப் பார்த்து நிற்க;
வலிக்கொண்ட மேனியோக்
கதறி நிற்க;
முட்டி மோதும் மூச்சியோத்
தொண்டைக்குழியை
குத்திக் கிழிக்க;
புரியாதப் பயம்
தொற்றிக்கொள்ள;
காரணமே அறியாமல்
கண்கள் நீர் சொரிய!

நிமிடங்களே எனத்
தெரிந்தப்பின்னும்;
கெஞ்சிக் கேட்கும் உள்ளம்;
இன்னொரு முறை
அவகாசம் கிடைக்காதா
என ஏங்கித் தவிக்கும் மனம்!

முந்தவும் செய்யா;
பிந்தவும் செய்ய;
மூச்சைப் பறிக்கும்
மரணம் வந்தப்பின்னே;
குமுறி அழுது என்னப் பயன்;

இருக்கும் காலம்
இறைவணக்கத்தை
இறுக்கப் பிடி;
இல்லையேல்
இறுதி நேரம்
இருக்காது
இலகுவாய்
இறைவனின்
இறுதிப்பிடி!

3 comments:

  1. //முந்தவும் செய்யா;
    பிந்தவும் செய்ய;
    மூச்சைப் பறிக்கும்
    மரணம் வந்தப்பின்னே;//

    மிக..மிக..அருமையான வரிகள், யாசர்

    ReplyDelete
  2. மிக அருமை

    நல்ல பதிவு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அன்பு சகோதரர் யாசர் அவர்களே அஸ்ஸலாமு அழைக்கும்
    மிகவும் அருமை தங்களின் இந்த வரிகள் தொடரட்டும் தங்களின் தொண்டு

    முந்தவும் செய்யா;
    பிந்தவும் செய்ய;
    மூச்சைப் பறிக்கும்
    மரணம் வந்தப்பின்னே.....
    தோழன் ....
    முஹம்மத் ஜான்

    ReplyDelete