கொஞ்சம் சாப்பிடுங்கவெதும்பிய உள்ளத்தால் 
விழிகள் தளும்பும்;
உன் நினைவுகளிலே 
நெஞ்சம் மூழ்கும்;
ஒரு பிடி உண்டாலும் 
உன் நினைவுகளால் 
தொண்டைத் திக்கும்!

கொஞ்சம் சாப்பிடுங்க எனக் 
கெஞ்சலாய் நீ 
கொஞ்சும் போதெல்லாம்
முடியாது என 
முறைத்தத் தருணம்
இன்று முட்டித் தள்ளுகிறது;
நெஞ்சைக் கனக்கச் செய்கிறது!


வெதும்பிய உள்ளத்தால் 
விழிகள் தளும்பும்;
உன் நினைவுகளிலே 
நெஞ்சம் மூழ்கும்;
ஒரு பிடி உண்டாலும் 
உன் நினைவுகளால் 
தொண்டைத் திக்கும்!

கொஞ்சம் சாப்பிடுங்க எனக் 
கெஞ்சலாய் நீ 
கொஞ்சும் போதெல்லாம்
முடியாது என 
முறைத்தத் தருணம்
இன்று முட்டித் தள்ளுகிறது;
நெஞ்சைக் கனக்கச் செய்கிறது!

12 comments:

 1. நல்ல கவிதை
  //கொஞ்சம் சாப்பிடுங்க எனக்
  கெஞ்சலாய் நீ
  கொஞ்சும் போதெல்லாம்
  முடியாது என
  முறைத்தத் தருணம்
  இன்று முட்டித் தள்ளுகிறது;
  நெஞ்சைக் கனக்கச் செய்கிறது!//

  இதை படிக்கும் போது கண்ணீர் கண்களை மூட்டுகிறது
  சரியாகவே சாப்பிட மாட்டேன்ங்கிறீங்கே என் மனைவி திட்டுவது இப்போதும் காதுகளில் கேட்கிறது

  ReplyDelete
 2. உணர்வுகளை கருத்துக்களாய் தெரிவித்ததிற்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 3. உங்கள்
  கவிதைகளை அல்ல (நிஜங்களை )
  வாசிக்கையில் மட்டும் சற்று
  சலனம் கொள்கிறது
  மனசு

  நல்ல கவிதை சகோ

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

  வெளிநாட்டு வாழ்வின் பிரிவு தந்த வலியின் வரிகள். உண்மை தான்,நம் பக்கத்தில் இருக்கும் போது உறவின் அருமை தெரியாது.இரு தரப்பினருக்குமே.

  ReplyDelete
 5. விடுதலையின் சாவி கைகளில் இருந்தும்,
  குடும்பத்திர்க்காய்,
  அடிமையாய்....

  ReplyDelete
 6. மிக்க நன்றி சீனி அவர்களே.

  ReplyDelete
 7. சுருண்ட முடிகள் சிலிர்த்து எழுந்து நிற்பதை உங்களின் கருத்திகளில் உணர்கிறேன். செய்தாலி அவர்களே

  ReplyDelete
 8. உண்மைதான் சகோதிரி ஆயிசா அவர்களே.

  ReplyDelete
 9. எப்போதுமே தனித்துவத்துடன் கருத்துப்பதிக்கும் சூர்யா ஜீவா அவர்களே உங்களுக்கும் நன்றி

  ReplyDelete
 10. மனதை நெகிழ வைக்கும் கவிதை !

  ReplyDelete
 11. மிக்க நன்றி தனபாலன் அவர்களே.

  ReplyDelete