SOLAR SQUARE




தட்டுப்பாடு நிறைந்தத்
தரணியிலே – தினம்
கொட்டோக் கொட்டென்று கொட்டும்
சூரியக் கதிர்வீச்சைப்
பிடித்துத்தர நாங்கள் உதவுகிறோம்!!!



தட்டுப்பாடு நிறைந்தத்
தரணியிலே – தினம்
கொட்டோக் கொட்டென்று கொட்டும்
சூரியக் கதிர்வீச்சைப்
பிடித்துத்தர நாங்கள் உதவுகிறோம்!!!

சூரிய ஒளி மின்சாரம்




தொடர் மின்வெட்டும்
தொடரும் மின் கட்டண உயர்வும்
தொடர்ந்து நம்மை துரத்த;

இருள் சூழ்ந்த இடமென்று 
இதயம் ஒரமாய் உரைக்க;
இருளே இரவென்று இருந்தாலும்
மின்சாரமும் ஒளி கக்க 
வழியில்லாமல் வக்கத்துப் போக;

காற்றில் ஜன்னல் அடித்தாலும்
கள்ளனோ என அச்சமாய்;
மெழுகுவர்த்தி ஒளியில் தேடியதுபோதும்;
படிக்கும் பிள்ளைகள் 
புத்தகத்தோடு மெழுகைச் 
சுமந்ததுபோதும்;
காற்றுக்காக விசிறி 
சுற்றி சுற்றி விசிறிக்கே 
மயக்கம் வந்ததுபோதும்!

ஒயாமல் ஒடும்
சூரியஒளி மின்சாரம் வந்துவிட்டது;
பலம் கொண்ட ஒளியால்
இருளை வென்றுவிட்டது;
மின் கட்டண உயர்வை
கொன்றுவிட்டது!

சூரிய ஓளி மின்சாரத்திற்கு அணுகவும்:

SOLAR SQUARE
MAYILADUTHURAI
96 55 85 35 41
99 43 74 72 25
04364-222123




தொடர் மின்வெட்டும்
தொடரும் மின் கட்டண உயர்வும்
தொடர்ந்து நம்மை துரத்த;

இருள் சூழ்ந்த இடமென்று 
இதயம் ஒரமாய் உரைக்க;
இருளே இரவென்று இருந்தாலும்
மின்சாரமும் ஒளி கக்க 
வழியில்லாமல் வக்கத்துப் போக;

காற்றில் ஜன்னல் அடித்தாலும்
கள்ளனோ என அச்சமாய்;
மெழுகுவர்த்தி ஒளியில் தேடியதுபோதும்;
படிக்கும் பிள்ளைகள் 
புத்தகத்தோடு மெழுகைச் 
சுமந்ததுபோதும்;
காற்றுக்காக விசிறி 
சுற்றி சுற்றி விசிறிக்கே 
மயக்கம் வந்ததுபோதும்!

ஒயாமல் ஒடும்
சூரியஒளி மின்சாரம் வந்துவிட்டது;
பலம் கொண்ட ஒளியால்
இருளை வென்றுவிட்டது;
மின் கட்டண உயர்வை
கொன்றுவிட்டது!

சூரிய ஓளி மின்சாரத்திற்கு அணுகவும்:

SOLAR SQUARE
MAYILADUTHURAI
96 55 85 35 41
99 43 74 72 25
04364-222123

வறுத்தெடுக்கும் வட்டி


கொடுத்தவன் உள்ளம்
குளிர்ந்து நின்று;
வாங்கியவனின் உள்ளம்
குலைந்து விழுந்து;
அழுதுப் புலம்பும் சமுதாயம் 
அய்யகோ என்னப் பரிதாபம்!

வட்டிக்குச் செல்லப்பெயரிட்டு;
அதற்கு மீட்டர் 
ராக்கெட் பெயரிட்டு;
அணு தினமும் மனிதனின்
மானத்தைத் தூக்கிலிட்டு;
மிரட்டும் முரட்டு வட்டி!

தின்று மெல்லும் 
அரக்கனை மனம் 
அழிக்கத் துடிக்க எத்தனிக்குது;
அதற்கு இஸ்லாம்
மட்டும் வழிக்கொடுக்குது!

வறுத்தெடுக்கும் வட்டியைக்
கழுத்தறுப்போம்; 
விதைக்கு விலைக்கொடுப்போம்;
சமுதாயத்தின் சுமை ஒழிப்போம்!

உதவி வேண்டி:

கொடுத்தவன் உள்ளம்
குளிர்ந்து நின்று;
வாங்கியவனின் உள்ளம்
குலைந்து விழுந்து;
அழுதுப் புலம்பும் சமுதாயம் 
அய்யகோ என்னப் பரிதாபம்!

வட்டிக்குச் செல்லப்பெயரிட்டு;
அதற்கு மீட்டர் 
ராக்கெட் பெயரிட்டு;
அணு தினமும் மனிதனின்
மானத்தைத் தூக்கிலிட்டு;
மிரட்டும் முரட்டு வட்டி!

தின்று மெல்லும் 
அரக்கனை மனம் 
அழிக்கத் துடிக்க எத்தனிக்குது;
அதற்கு இஸ்லாம்
மட்டும் வழிக்கொடுக்குது!

வறுத்தெடுக்கும் வட்டியைக்
கழுத்தறுப்போம்; 
விதைக்கு விலைக்கொடுப்போம்;
சமுதாயத்தின் சுமை ஒழிப்போம்!

உதவி வேண்டி:

பர்மாவில் நாங்கள்



கொடூரமாய் கொலையுண்டு 
இன்னொருமுறை 
மண்ணிற்கு உரமாகியச் 
சமூகம்!

குருதியை முத்தமிடாத பூமி
உலக வரைபடத்தில் 
மிச்சமேதுமில்லை;  
குரல் கொடுக்க எவருமில்லை!

ஊடகம் ஊமையானது ஏனோ;
எங்கள்  உயிர்கள் மட்டும் 
உங்களுக்கு ஈனமானது ஏனோ;
உலக நாடுகள் 
அமைதிக் காப்பது ஏனோ;
கொடூரமாய் இறக்கும் 
எங்களுக்கு இது 
அமைதி அஞ்சலி தானோ! 


கொடூரமாய் கொலையுண்டு 
இன்னொருமுறை 
மண்ணிற்கு உரமாகியச் 
சமூகம்!

குருதியை முத்தமிடாத பூமி
உலக வரைபடத்தில் 
மிச்சமேதுமில்லை;  
குரல் கொடுக்க எவருமில்லை!

ஊடகம் ஊமையானது ஏனோ;
எங்கள்  உயிர்கள் மட்டும் 
உங்களுக்கு ஈனமானது ஏனோ;
உலக நாடுகள் 
அமைதிக் காப்பது ஏனோ;
கொடூரமாய் இறக்கும் 
எங்களுக்கு இது 
அமைதி அஞ்சலி தானோ! 

இனிய ரமலானே



தளர்ந்தத்  தசைகளும்
சிலிர்த்து நிற்கும்;
வறண்ட விழிகளும் 
நனைந்துப் போகும்;
பொன்னான மாதம் 
எனைப் போர்த்தியப்படி!

மணக்கும் இறைவேதமும்
என் மடியில்;
ஒளிரும் என் நெற்றியும்
தரையில்;
ஒளித்த செல்வங்கள்
தர்மத்திற்காக வெளியில்;
நன்மையை நோக்கி
என்  வயிறுப் பசியில்!

ஏக்கத்துடன்;
நன்மையைப் பெரும் 
நோக்கத்துடன்,
பாவமன்னிப்பிற்கானத்
தேட்டத்துடன்;
வல்லோனின் அருளுக்காக
வாட்டத்துடன் என் முகம்!

வளம் நிறைந்த ரமலானே 
உனை வீணடிப்பேனோ;
அடுத்த வருடம் உனையடைய 
நான் இருப்பேனோ!


தளர்ந்தத்  தசைகளும்
சிலிர்த்து நிற்கும்;
வறண்ட விழிகளும் 
நனைந்துப் போகும்;
பொன்னான மாதம் 
எனைப் போர்த்தியப்படி!

மணக்கும் இறைவேதமும்
என் மடியில்;
ஒளிரும் என் நெற்றியும்
தரையில்;
ஒளித்த செல்வங்கள்
தர்மத்திற்காக வெளியில்;
நன்மையை நோக்கி
என்  வயிறுப் பசியில்!

ஏக்கத்துடன்;
நன்மையைப் பெரும் 
நோக்கத்துடன்,
பாவமன்னிப்பிற்கானத்
தேட்டத்துடன்;
வல்லோனின் அருளுக்காக
வாட்டத்துடன் என் முகம்!

வளம் நிறைந்த ரமலானே 
உனை வீணடிப்பேனோ;
அடுத்த வருடம் உனையடைய 
நான் இருப்பேனோ!