எல்லாம் அன்பிற்காக..


விடுதியில்
விட்டத்தைப் பார்த்து;
ஏக்கமாய்;
தூக்கத்திற்குப் போர்வைக்குள்
சுருங்கும் பிஞ்சுகள்!

பையை முட்டிக்கொண்டு;
பணம் இருந்தாலும்;
கொடுக்க மறுத்து;
மனம் இறுத்துப்போன
இதயங்கள்!

பாரம் என்றெண்ணி;
தூரமான முதியோர்
இல்லங்கள் இனிப்பாக;
துருப்பிடித்தக் கரைப்பிடித்தக்
கருவறைக் குளவிகளுக்கு!

விழிகள் பேசி;
உதடுகள் சுருங்கி;
சுரந்தக் கன்னங்கள்
விம்மி பார்க்கும்;
அன்பிற்கு அழுதுப் புலம்பும்!

பாவப்பட்ட
உள்ளங்களைக் கண்டு;
விழிக்கு வியர்க்காவிட்டாலும்
பரவாயில்லை;
வற்றிய இதயத்தோடு வறியவரை
முட்டிப்பார்க்க வேண்டாம்!

விடுதியில்
விட்டத்தைப் பார்த்து;
ஏக்கமாய்;
தூக்கத்திற்குப் போர்வைக்குள்
சுருங்கும் பிஞ்சுகள்!

பையை முட்டிக்கொண்டு;
பணம் இருந்தாலும்;
கொடுக்க மறுத்து;
மனம் இறுத்துப்போன
இதயங்கள்!

பாரம் என்றெண்ணி;
தூரமான முதியோர்
இல்லங்கள் இனிப்பாக;
துருப்பிடித்தக் கரைப்பிடித்தக்
கருவறைக் குளவிகளுக்கு!

விழிகள் பேசி;
உதடுகள் சுருங்கி;
சுரந்தக் கன்னங்கள்
விம்மி பார்க்கும்;
அன்பிற்கு அழுதுப் புலம்பும்!

பாவப்பட்ட
உள்ளங்களைக் கண்டு;
விழிக்கு வியர்க்காவிட்டாலும்
பரவாயில்லை;
வற்றிய இதயத்தோடு வறியவரை
முட்டிப்பார்க்க வேண்டாம்!

அன்புள்ள மகனுக்கு..


பருவத்தில் மறுத்துவிட்டப்
பள்ளிச் சீருடையால்;
வயதுக் கடந்து
வளைகுடாவில்
உடமையான உடை!

புதிய ஆடைகள்
உன் மேனியை
மணக்கச் செய்ய;
கம கமக்கும்
ஈர வியர்வை ஆடை
தினமும்!

நமக்கென்றுத் தனிவீட்டில்
உனக்கு ஒரு அறை எழுப்ப;
ஒரு அறையே வீடாக்கி;
அறியாதவர்களுடன்
நான் இங்கே!

கண்டிப்புகள் கசப்பாய்;
கொஞ்சம் வெறுப்பாய்;
உண்மை நெருப்பாய்
தோன்றுகிறதா;

என் தந்தை
விசும்பல் இப்போதுதான்;
இதயத்தில் இறுக்கமாய் எனக்கு;
மீண்டும் ஒரு சந்தர்பம்
வேண்டாம் உனக்கு!

பருவத்தில் மறுத்துவிட்டப்
பள்ளிச் சீருடையால்;
வயதுக் கடந்து
வளைகுடாவில்
உடமையான உடை!

புதிய ஆடைகள்
உன் மேனியை
மணக்கச் செய்ய;
கம கமக்கும்
ஈர வியர்வை ஆடை
தினமும்!

நமக்கென்றுத் தனிவீட்டில்
உனக்கு ஒரு அறை எழுப்ப;
ஒரு அறையே வீடாக்கி;
அறியாதவர்களுடன்
நான் இங்கே!

கண்டிப்புகள் கசப்பாய்;
கொஞ்சம் வெறுப்பாய்;
உண்மை நெருப்பாய்
தோன்றுகிறதா;

என் தந்தை
விசும்பல் இப்போதுதான்;
இதயத்தில் இறுக்கமாய் எனக்கு;
மீண்டும் ஒரு சந்தர்பம்
வேண்டாம் உனக்கு!

இடிந்த தேசத்தில் இருந்து




பகையால் புகையும் தேசம்;
புதைந்த நேசங்களால்
கதறும் பாசம்;

குண்டுச் சப்தத்தால்
சவ்வுகள் அலற;
உறக்கம் எங்களுக்கு
இரக்கமாக இரங்கல்
தெரிவிக்கும்!

நேசநாடுகள்
மோசம் செய்ய;
சுவாசம் செய்ய
வழியில்லாமல்;
வாசம் தேடி
அகதிகளாய்
அநாதைகளாய்!

கனல் தெறிக்கும்
கண்களோடு;
நியாயத்திற்கு
ஏங்கித் தவிக்கும்;
இடிந்த தேசத்தில் இருந்து;
ஒடிந்துப்போனக் குரலுடன்!



பகையால் புகையும் தேசம்;
புதைந்த நேசங்களால்
கதறும் பாசம்;

குண்டுச் சப்தத்தால்
சவ்வுகள் அலற;
உறக்கம் எங்களுக்கு
இரக்கமாக இரங்கல்
தெரிவிக்கும்!

நேசநாடுகள்
மோசம் செய்ய;
சுவாசம் செய்ய
வழியில்லாமல்;
வாசம் தேடி
அகதிகளாய்
அநாதைகளாய்!

கனல் தெறிக்கும்
கண்களோடு;
நியாயத்திற்கு
ஏங்கித் தவிக்கும்;
இடிந்த தேசத்தில் இருந்து;
ஒடிந்துப்போனக் குரலுடன்!

அழும் வயிறு..


அழுக்கு ஆடையும்;
வறட்சிச் சிகையும்;
ஏழ்மைக்கு
உரிமையாளனாய்
ஏழை என்றப் பெயருடன்!

அழும் வயிறுக்கு
ஆதரவாய்
விழிகள் விசும்ப;
குடலில் உலைக் கொதிக்க;
பாதம் இரண்டும்
படுக்கையைத் தேடும்!

எச்சம் கொண்ட
மிச்ச உணவை
வீசுவதற்கு முன்;
வீதியில் பாருங்கள்;
வக்கற்று வயிற்றில்
பசி சுமந்து;
என்னைப்போல
எவருமுண்டா என்று!


அழுக்கு ஆடையும்;
வறட்சிச் சிகையும்;
ஏழ்மைக்கு
உரிமையாளனாய்
ஏழை என்றப் பெயருடன்!

அழும் வயிறுக்கு
ஆதரவாய்
விழிகள் விசும்ப;
குடலில் உலைக் கொதிக்க;
பாதம் இரண்டும்
படுக்கையைத் தேடும்!

எச்சம் கொண்ட
மிச்ச உணவை
வீசுவதற்கு முன்;
வீதியில் பாருங்கள்;
வக்கற்று வயிற்றில்
பசி சுமந்து;
என்னைப்போல
எவருமுண்டா என்று!

நொறுங்கும் மனம்...




அத்தா என்ற
வார்த்தை மட்டும்
பரிட்சயமாய்;
வந்து நிற்கும் என்னை
வழிப்போக்கனாய் கண்டு
விழிப்பிதிங்கி
உதட்டைப் பிதுக்கும்
குழந்தை!

அத்தாம்மா
எனச் செல்லமாய்;
உன்னை அள்ள
நினைத்த எனக்கு;
உன் நகக்கீறல்கள்
பதக்கமாய்!

இப்பத்தானே;
வந்து இருக்குறாய் என
உறவினர்களின்
ஆறுதல் வார்த்தைகள்
அவமானமாய் எனக்கு;

அசடு வழியச்
சிரித்துவிட்டு;
அம்மாவிடம் கொடுக்க;
அடங்கிப்போகும்
உன் அழுகை!

வண்ண வண்ண 
விளையாட்டுச்
சாமான்கள் காட்டி;
ஆசைத்தீர அழைத்துப்
பார்ப்பேன் உன்னை;
கரத்தில் உள்ள
பொருளை வாங்க
உன் தலை
அம்மாவிடம் திரும்ப;
என் மனம் நொறுங்க!



அத்தா என்ற
வார்த்தை மட்டும்
பரிட்சயமாய்;
வந்து நிற்கும் என்னை
வழிப்போக்கனாய் கண்டு
விழிப்பிதிங்கி
உதட்டைப் பிதுக்கும்
குழந்தை!

அத்தாம்மா
எனச் செல்லமாய்;
உன்னை அள்ள
நினைத்த எனக்கு;
உன் நகக்கீறல்கள்
பதக்கமாய்!

இப்பத்தானே;
வந்து இருக்குறாய் என
உறவினர்களின்
ஆறுதல் வார்த்தைகள்
அவமானமாய் எனக்கு;

அசடு வழியச்
சிரித்துவிட்டு;
அம்மாவிடம் கொடுக்க;
அடங்கிப்போகும்
உன் அழுகை!

வண்ண வண்ண 
விளையாட்டுச்
சாமான்கள் காட்டி;
ஆசைத்தீர அழைத்துப்
பார்ப்பேன் உன்னை;
கரத்தில் உள்ள
பொருளை வாங்க
உன் தலை
அம்மாவிடம் திரும்ப;
என் மனம் நொறுங்க!