அன்னையின் இரகசியம்..


அழும் உன்னை
ஆறுதல் செய்ய;
ஆயிரம் முகபாவனைகள்;
தும்மினாலும் சிரிக்கிறாய்;
அழுதாலும் சிரிக்கிறாய்!

என் தூக்கத்தைக்
கெடுக்கும் உன் அழுகை;
காரணிகள் காண்பதற்குள்;
எகிறும் உன் குரலோசை!

எனக்கேப் புரியாமல்
கொஞ்சல் என;
உளறி வைப்பேன்;
மிரள வைப்பேன்;
அழும் உன்னைக் கொஞ்சம்
உருளவும் வைப்பேன்!

அலுத்துப்போன நான்;
அழைப்பேன் உன்
அன்னையை;
வாரி அணைத்து;
உன் வாயில் முத்தமிட்டுக்;
கொஞ்சும் குரலால்
உன்னைக் கொஞ்சி எடுக்க;
அழும் உன் குரலோ அடங்கிப்போக!

குடும்பச் சுமை;
என் தலையில் என்றுக்;
கனம் பிடித்து அலைந்த நான்;
உன் அழுகையிடம்
தோற்றுப்போனேன்;
அடக்கி வைத்த;
உன் அன்னையைக் கண்டு
மலைத்துப் போனேன்!

அழும் உன்னை
ஆறுதல் செய்ய;
ஆயிரம் முகபாவனைகள்;
தும்மினாலும் சிரிக்கிறாய்;
அழுதாலும் சிரிக்கிறாய்!

என் தூக்கத்தைக்
கெடுக்கும் உன் அழுகை;
காரணிகள் காண்பதற்குள்;
எகிறும் உன் குரலோசை!

எனக்கேப் புரியாமல்
கொஞ்சல் என;
உளறி வைப்பேன்;
மிரள வைப்பேன்;
அழும் உன்னைக் கொஞ்சம்
உருளவும் வைப்பேன்!

அலுத்துப்போன நான்;
அழைப்பேன் உன்
அன்னையை;
வாரி அணைத்து;
உன் வாயில் முத்தமிட்டுக்;
கொஞ்சும் குரலால்
உன்னைக் கொஞ்சி எடுக்க;
அழும் உன் குரலோ அடங்கிப்போக!

குடும்பச் சுமை;
என் தலையில் என்றுக்;
கனம் பிடித்து அலைந்த நான்;
உன் அழுகையிடம்
தோற்றுப்போனேன்;
அடக்கி வைத்த;
உன் அன்னையைக் கண்டு
மலைத்துப் போனேன்!

கவிதை எழுத


எரியும் உண்மைகள்
எதிரினில் இருக்க;
கருவில் உதிக்கும்
சிந்தனைத் தெறிக்க;
மூடி மறைக்கும்
பொய் எதற்கு;
முட்டித் தள்ளுவோம்
உண்மையை உரைத்து!

வலிகள் உணர்த்த
வரியைக் கொண்டு;
வரிசைப்படுத்தக்
கவிதை உண்டு;
குத்தும் உண்மைகள்
குரல்வளையை அடைக்க;
குற்றம் கொண்டப் 
பொய்யைக் கொண்டுக்;
கற்பனையானக்
கவிதை எதற்கு!

சொல்லும் பொய்யோ
நடத்தையைக் கெடுக்கும்;
சுவர்க்கம் செல்லும்
வழியைத் தடுக்கும்;
பக்கத்தைத் திண்ணும்
பொய்யை விடு;
முத்தமிடும்
உண்மையைத் தொடு!

எரியும் உண்மைகள்
எதிரினில் இருக்க;
கருவில் உதிக்கும்
சிந்தனைத் தெறிக்க;
மூடி மறைக்கும்
பொய் எதற்கு;
முட்டித் தள்ளுவோம்
உண்மையை உரைத்து!

வலிகள் உணர்த்த
வரியைக் கொண்டு;
வரிசைப்படுத்தக்
கவிதை உண்டு;
குத்தும் உண்மைகள்
குரல்வளையை அடைக்க;
குற்றம் கொண்டப் 
பொய்யைக் கொண்டுக்;
கற்பனையானக்
கவிதை எதற்கு!

சொல்லும் பொய்யோ
நடத்தையைக் கெடுக்கும்;
சுவர்க்கம் செல்லும்
வழியைத் தடுக்கும்;
பக்கத்தைத் திண்ணும்
பொய்யை விடு;
முத்தமிடும்
உண்மையைத் தொடு!

வாக்காளன் நான்



என் விரல் நுனியில்
மையிட;
விலை நடக்கும்;
இடம் கொடுத்தால்
பை நிறையும்!

போட்டிப் போட்டுப்
போஸ்டர்கள்;
வாட்டி எடுக்கும்;
என் வீட்டுச் சுவர்கள்
காட்டிக் கொடுக்கும்!

வீசி எறியும்
வாக்குறுதிகள்
காற்றோடுக் கலந்துவிடும்;
காத்திருந்துக் காத்திருந்து
எங்கள் வயதுக்
காலமாகிவிடும்!

மறந்துப்போன
என் நினைவுகள்
மலர்ந்து விடும்;
ஓயாத ஒலிப்பெருக்கியின்
ஓலங்கள் செவிப்பறயை
எட்டி உதைக்கும்;
யாரென்றுத் தெரியாமலே;
கட்சி என்னைக்
கட்டியணைக்கும்!


என் விரல் நுனியில்
மையிட;
விலை நடக்கும்;
இடம் கொடுத்தால்
பை நிறையும்!

போட்டிப் போட்டுப்
போஸ்டர்கள்;
வாட்டி எடுக்கும்;
என் வீட்டுச் சுவர்கள்
காட்டிக் கொடுக்கும்!

வீசி எறியும்
வாக்குறுதிகள்
காற்றோடுக் கலந்துவிடும்;
காத்திருந்துக் காத்திருந்து
எங்கள் வயதுக்
காலமாகிவிடும்!

மறந்துப்போன
என் நினைவுகள்
மலர்ந்து விடும்;
ஓயாத ஒலிப்பெருக்கியின்
ஓலங்கள் செவிப்பறயை
எட்டி உதைக்கும்;
யாரென்றுத் தெரியாமலே;
கட்சி என்னைக்
கட்டியணைக்கும்!

இஸ்லாமியனின் தாடி


தொங்கும் தலை
ரோமங்களைக் கண்டுத்
தோணாது எவருக்கும்;
அரைக்குறை
ஆடைகளால்
கிள்ளிவிடும் இளமைக்கு;
தூண்டில் போடும்;
கவர்ச்சிக்குக் கரம்
கொடுப்பார்கள் யாவருக்கும்!

விமான நிலையங்களும்
இரயில் நிலையங்களும்
பரப்பரப்பாகும்;
மிரண்டுப்போய்
பாவமாய் என் தாடி!

சோதனைகள் இல்லாமலே;
தாடியைக் கண்டு;
தடவியல் செய்யும்
சாதனைகள் இங்கே!
மாற்றுச் சகோதரர்களின்
தாடைகளை முட்டிக்கொண்டு
மொட்டு விட்டால் மட்டும்;
அழகு;அறிவாளிகள்;
பட்டங்களும் பட்டயங்களும்!

புரியாதப் புதிராய்
விடைக் கிடைக்காமல்;
வினாவோடு;
உலா வந்த எனக்கு;
வெல்லமாய்;
மெல்லமாய் வந்தப் பதில்;

தவறேதுமில்லைத் தாடியின் மேல்;
தவறி இஸ்லாமியனின்
தாடைக்குத் துணை
வந்ததால்தான் இந்த வினை!

தொங்கும் தலை
ரோமங்களைக் கண்டுத்
தோணாது எவருக்கும்;
அரைக்குறை
ஆடைகளால்
கிள்ளிவிடும் இளமைக்கு;
தூண்டில் போடும்;
கவர்ச்சிக்குக் கரம்
கொடுப்பார்கள் யாவருக்கும்!

விமான நிலையங்களும்
இரயில் நிலையங்களும்
பரப்பரப்பாகும்;
மிரண்டுப்போய்
பாவமாய் என் தாடி!

சோதனைகள் இல்லாமலே;
தாடியைக் கண்டு;
தடவியல் செய்யும்
சாதனைகள் இங்கே!
மாற்றுச் சகோதரர்களின்
தாடைகளை முட்டிக்கொண்டு
மொட்டு விட்டால் மட்டும்;
அழகு;அறிவாளிகள்;
பட்டங்களும் பட்டயங்களும்!

புரியாதப் புதிராய்
விடைக் கிடைக்காமல்;
வினாவோடு;
உலா வந்த எனக்கு;
வெல்லமாய்;
மெல்லமாய் வந்தப் பதில்;

தவறேதுமில்லைத் தாடியின் மேல்;
தவறி இஸ்லாமியனின்
தாடைக்குத் துணை
வந்ததால்தான் இந்த வினை!

மற்றொருப் போதை


புகுந்துவிட்டச்
சின்னத்திரையால்;
விலகிவிட்ட உறவுகள்;
திரையைப் பார்த்து
இமையைக் கசக்கும்
மங்கைகள்;
அழும் தன் குழந்தைக்குக்
காரணத்தைக் கேட்காமல்
அதட்டல் மட்டும்
அவசரமாய்!

வயதைத் தொட்டுத்
திக்குத் தெரியா
இளமைக்குக்;
கட்டுப்போட்டுக்;
கட்டிப்போடப்;
போட்டிப் போடும்
வியாபாரக் காந்தங்கள்!

பசுமரத்து ஆணிகளுக்குப்;
பாசங்கள் பழமையாகி;
நேசங்கள் எரிச்சலாகித்;
துர்நாற்ற வார்த்தைகள்;
மணம் வீசும்
மழலையின் வாய்கள்
பாடல்களாய் தொளிக்க!  
முகம் மலர்ந்துப் பெற்றோர்கள்;
உறவினருக்கு ஆடிக்காட்டச்
சொல்லும் அவலம்!

மறைந்திருந்து முட்டித்தள்ளும்
அனாச்சாரங்கள் அங்குசமாய்
மனிதனுக்கு;
தனக்கேத் தெரியாமல்
தள்ளாடி விழும்
மற்றொருப் போதை!

புகுந்துவிட்டச்
சின்னத்திரையால்;
விலகிவிட்ட உறவுகள்;
திரையைப் பார்த்து
இமையைக் கசக்கும்
மங்கைகள்;
அழும் தன் குழந்தைக்குக்
காரணத்தைக் கேட்காமல்
அதட்டல் மட்டும்
அவசரமாய்!

வயதைத் தொட்டுத்
திக்குத் தெரியா
இளமைக்குக்;
கட்டுப்போட்டுக்;
கட்டிப்போடப்;
போட்டிப் போடும்
வியாபாரக் காந்தங்கள்!

பசுமரத்து ஆணிகளுக்குப்;
பாசங்கள் பழமையாகி;
நேசங்கள் எரிச்சலாகித்;
துர்நாற்ற வார்த்தைகள்;
மணம் வீசும்
மழலையின் வாய்கள்
பாடல்களாய் தொளிக்க!  
முகம் மலர்ந்துப் பெற்றோர்கள்;
உறவினருக்கு ஆடிக்காட்டச்
சொல்லும் அவலம்!

மறைந்திருந்து முட்டித்தள்ளும்
அனாச்சாரங்கள் அங்குசமாய்
மனிதனுக்கு;
தனக்கேத் தெரியாமல்
தள்ளாடி விழும்
மற்றொருப் போதை!