கிளி ஜோசியம்



சொச்ச அட்டைகளில் 
மொத்த மக்களுக்கும் 
எதிர்காலம் உரைத்து;
நிகழ்காலம் தள்ளும் 
என்னிடம்;
உள்ளங்கையைக் காட்டி ;
பைசாக்களை நீட்டும்
மக்களை நினைத்தால்
கொல்லென்றுச் சிரிப்புடன் நான்;
ஓர் நெல்லுக்கு வேலைச் செய்யும் 
என் கிளி பரவாயில்லை என்று! 


சொச்ச அட்டைகளில் 
மொத்த மக்களுக்கும் 
எதிர்காலம் உரைத்து;
நிகழ்காலம் தள்ளும் 
என்னிடம்;
உள்ளங்கையைக் காட்டி ;
பைசாக்களை நீட்டும்
மக்களை நினைத்தால்
கொல்லென்றுச் சிரிப்புடன் நான்;
ஓர் நெல்லுக்கு வேலைச் செய்யும் 
என் கிளி பரவாயில்லை என்று! 

தன்மானம்



ஒட்டியிருக்கும் பசியால்
முதுகு கூண் விழுந்தாலும் 
தன்மானம்; 
தலை நிமிர்ந்து நிற்கட்டும்;
இப்படித் தரையில்
கடையினைப்  போட்டாவது
முகம் சிரிக்கட்டும்;
நானே முதலாளி என 
உழைப்பிற்கு உயர்வால் 
கொடிக்கட்டிக் கொள்ளட்டும்!  


ஒட்டியிருக்கும் பசியால்
முதுகு கூண் விழுந்தாலும் 
தன்மானம்; 
தலை நிமிர்ந்து நிற்கட்டும்;
இப்படித் தரையில்
கடையினைப்  போட்டாவது
முகம் சிரிக்கட்டும்;
நானே முதலாளி என 
உழைப்பிற்கு உயர்வால் 
கொடிக்கட்டிக் கொள்ளட்டும்!  

வேண்டாம் நம் பிள்ளைக்கு



சேர்ந்து வாழும் காலத்தில்
சோர்ந்துப் போய்
தனிமையில் நீயும் நானும்;
அங்கலாய்க்கும் 
வயதின் கதறலை
வாய் மூடி விழிப்பிதிங்கி;
வழியனுப்புவிட்டேன்!   

படுத்து உருள
பஞ்சு மெத்தையும்;
உடுத்தி மகிழ
பட்டுப்புடவையும்;
வாழ்ந்து மகிழ
வசதியாய் வீடும் 
உனக்கு தந்து மகிழ்ந்தேன்!

தேவை எனும் தேடுதலுக்குப்
பாலையில் பலியாகி;
இப்போது;
கன்னம் குழியாகி;
முடியோ நரையாகி;
உன் முன்னே!

தேம்பி அழ 
தெம்பில்லாமல்;
சாய்ந்துக் கொள்கிறேன்
உன் மேனியில்;
சபதம் கொண்டேன்
இனியொரு புலம்பல்
வேண்டாம் நம் பிள்ளைக்கு!


சேர்ந்து வாழும் காலத்தில்
சோர்ந்துப் போய்
தனிமையில் நீயும் நானும்;
அங்கலாய்க்கும் 
வயதின் கதறலை
வாய் மூடி விழிப்பிதிங்கி;
வழியனுப்புவிட்டேன்!   

படுத்து உருள
பஞ்சு மெத்தையும்;
உடுத்தி மகிழ
பட்டுப்புடவையும்;
வாழ்ந்து மகிழ
வசதியாய் வீடும் 
உனக்கு தந்து மகிழ்ந்தேன்!

தேவை எனும் தேடுதலுக்குப்
பாலையில் பலியாகி;
இப்போது;
கன்னம் குழியாகி;
முடியோ நரையாகி;
உன் முன்னே!

தேம்பி அழ 
தெம்பில்லாமல்;
சாய்ந்துக் கொள்கிறேன்
உன் மேனியில்;
சபதம் கொண்டேன்
இனியொரு புலம்பல்
வேண்டாம் நம் பிள்ளைக்கு!

குழந்தைத் தொழிலாளி




குழந்தைத் தொழிலாளர்
எதிர்ப்புத் தினம்
கற்றுக்கொடுக்கும்
பள்ளிக்கு நாங்கள்
கொத்தனாருக்கு எடுபிடியாய்!

குருதிக் கொதிக்க;
குரல்வளை நெறிக்க;
கூக்குரலிடும் அரசியல்வாதிகளின்
மேடைப் பேச்சிற்கு;
தோரணம் கட்டக் கூலிகளாய்!

அட்டைப் படத்தில்
எங்களைப் போட்டு;
சட்டைப் பையை
நிரப்பிக்கொள்ளும் ஊடகத்திற்கு
வியாபாரச் சக்தியாய்!



குழந்தைத் தொழிலாளர்
எதிர்ப்புத் தினம்
கற்றுக்கொடுக்கும்
பள்ளிக்கு நாங்கள்
கொத்தனாருக்கு எடுபிடியாய்!

குருதிக் கொதிக்க;
குரல்வளை நெறிக்க;
கூக்குரலிடும் அரசியல்வாதிகளின்
மேடைப் பேச்சிற்கு;
தோரணம் கட்டக் கூலிகளாய்!

அட்டைப் படத்தில்
எங்களைப் போட்டு;
சட்டைப் பையை
நிரப்பிக்கொள்ளும் ஊடகத்திற்கு
வியாபாரச் சக்தியாய்!

அவமானம்


தனித்திருக்கும்
தன்மானத்தை இடமாற்றி;
இதயத்தைக் கனமாக்கி;
வெற்றிக்கு வெறியேற்றி;
தோல்வியைத் துண்டாக்கி;
முயற்சிக்கு முறுக்கேற்றி;
தடம் மறித்தப் படிக்கற்களைப்
படிப்பினையாக்கிப்
பாடம் புகட்டு;
நகைத்த உதடுகளை
சுருங்கச் செய்ய;
அவமானத்தை வெகுமானமாக்கி;
சுகமாய் நீயும் ஒடு!

தனித்திருக்கும்
தன்மானத்தை இடமாற்றி;
இதயத்தைக் கனமாக்கி;
வெற்றிக்கு வெறியேற்றி;
தோல்வியைத் துண்டாக்கி;
முயற்சிக்கு முறுக்கேற்றி;
தடம் மறித்தப் படிக்கற்களைப்
படிப்பினையாக்கிப்
பாடம் புகட்டு;
நகைத்த உதடுகளை
சுருங்கச் செய்ய;
அவமானத்தை வெகுமானமாக்கி;
சுகமாய் நீயும் ஒடு!