அவமானம்


தனித்திருக்கும்
தன்மானத்தை இடமாற்றி;
இதயத்தைக் கனமாக்கி;
வெற்றிக்கு வெறியேற்றி;
தோல்வியைத் துண்டாக்கி;
முயற்சிக்கு முறுக்கேற்றி;
தடம் மறித்தப் படிக்கற்களைப்
படிப்பினையாக்கிப்
பாடம் புகட்டு;
நகைத்த உதடுகளை
சுருங்கச் செய்ய;
அவமானத்தை வெகுமானமாக்கி;
சுகமாய் நீயும் ஒடு!

தனித்திருக்கும்
தன்மானத்தை இடமாற்றி;
இதயத்தைக் கனமாக்கி;
வெற்றிக்கு வெறியேற்றி;
தோல்வியைத் துண்டாக்கி;
முயற்சிக்கு முறுக்கேற்றி;
தடம் மறித்தப் படிக்கற்களைப்
படிப்பினையாக்கிப்
பாடம் புகட்டு;
நகைத்த உதடுகளை
சுருங்கச் செய்ய;
அவமானத்தை வெகுமானமாக்கி;
சுகமாய் நீயும் ஒடு!

ஒர் மொழி - பசி




ஒலிகளுக்கு வழிக்கொடுக்கும்
சவ்வுகள் இரண்டும்
சாத்திக்கொண்டு;
விழிகளின் ஓரம்;
ஈரம் ஓட்டிக்கொண்டு;
புதுமையாய் வயிறுக் கதைக்க
இரைச்சலாய் எரிச்சலாய்!

உணவைக் கொட்டுவதற்கு
முன்னே கொஞ்சம்
எட்டிப்பாருங்கள்;
விரையமாகும் உணவுகள்
எங்களுக்கு இரையாகும்;
வலியிலேக் கனமான
முதுகுத்தண்டையும்
நிமிரவைக்கும்!



ஒலிகளுக்கு வழிக்கொடுக்கும்
சவ்வுகள் இரண்டும்
சாத்திக்கொண்டு;
விழிகளின் ஓரம்;
ஈரம் ஓட்டிக்கொண்டு;
புதுமையாய் வயிறுக் கதைக்க
இரைச்சலாய் எரிச்சலாய்!

உணவைக் கொட்டுவதற்கு
முன்னே கொஞ்சம்
எட்டிப்பாருங்கள்;
விரையமாகும் உணவுகள்
எங்களுக்கு இரையாகும்;
வலியிலேக் கனமான
முதுகுத்தண்டையும்
நிமிரவைக்கும்!

எலுமிச்சை



சிலிர்க்க வைக்கும்
நிவாரணத்தோடுப் 
பிதிங்கி நிற்கிறேன்; 
கர்ப்பவதியைப் போல!

துவண்டுப்போன 
மேனியைப் பளப்பளக்க; 
கொழுத்து நிற்கும் பொடுகிற்குப் 
பொடிவைத்து அடிக்கொடுக்க;
பருக்களுக்குப் பாரமாய்;
களைப்பிற்குத் தூரமாய்!

அடுக்கிவைக்கும் ஆரோக்கியம் 
ஆயிரம் கொண்டாலும்;
வாகனத்தின் 
திருஷ்டியைக் கழிக்க;   
சக்கரத்திற்கு அடியில் 
என்னைத் திணித்து; 
இளித்து  நிற்கும்
மனிதர்களுக்கு மத்தியில்
மணமாய் நான்!



சிலிர்க்க வைக்கும்
நிவாரணத்தோடுப் 
பிதிங்கி நிற்கிறேன்; 
கர்ப்பவதியைப் போல!

துவண்டுப்போன 
மேனியைப் பளப்பளக்க; 
கொழுத்து நிற்கும் பொடுகிற்குப் 
பொடிவைத்து அடிக்கொடுக்க;
பருக்களுக்குப் பாரமாய்;
களைப்பிற்குத் தூரமாய்!

அடுக்கிவைக்கும் ஆரோக்கியம் 
ஆயிரம் கொண்டாலும்;
வாகனத்தின் 
திருஷ்டியைக் கழிக்க;   
சக்கரத்திற்கு அடியில் 
என்னைத் திணித்து; 
இளித்து  நிற்கும்
மனிதர்களுக்கு மத்தியில்
மணமாய் நான்!

பாலையில் ஓர் கோழை



கதை சொல்லும் விழிகள்
கண்ணீர் கக்க;
விரல்களோ வழியை மறிக்க;
பிதிங்கியது இதழ்கள்!

உன் குரல் கேட்டு;
இதயத்தில் உரல் ஒன்று இடிக்க;
சப்தம் எழுப்பாதத்  
தொண்டையைக்  கனைத்து;
வெறுப்பாய் உறுப்புகள் 
நெருப்பாய் உஷ்ணம் காட்ட;
ஒலிகள் உதறலோடு!

உன் நெருக்கமின்றி;
பல இரவுகள் உறக்கமின்றி;
உருண்டுப் படுக்க;
அறை நண்பர்கள்
குறை கேட்க;
ஒன்றுமில்லை என 
மென்று விழுங்க!
புது மாப்பிள்ளை 
எல்லோரும் கொஞ்ச;
தலையணை மட்டும் 
எனக்குத் தாலாட்டுப் பாட;
பாலையில் நான் 
கோழையாக!


கதை சொல்லும் விழிகள்
கண்ணீர் கக்க;
விரல்களோ வழியை மறிக்க;
பிதிங்கியது இதழ்கள்!

உன் குரல் கேட்டு;
இதயத்தில் உரல் ஒன்று இடிக்க;
சப்தம் எழுப்பாதத்  
தொண்டையைக்  கனைத்து;
வெறுப்பாய் உறுப்புகள் 
நெருப்பாய் உஷ்ணம் காட்ட;
ஒலிகள் உதறலோடு!

உன் நெருக்கமின்றி;
பல இரவுகள் உறக்கமின்றி;
உருண்டுப் படுக்க;
அறை நண்பர்கள்
குறை கேட்க;
ஒன்றுமில்லை என 
மென்று விழுங்க!
புது மாப்பிள்ளை 
எல்லோரும் கொஞ்ச;
தலையணை மட்டும் 
எனக்குத் தாலாட்டுப் பாட;
பாலையில் நான் 
கோழையாக!

கொஞ்சம் சாப்பிடுங்க



வெதும்பிய உள்ளத்தால் 
விழிகள் தளும்பும்;
உன் நினைவுகளிலே 
நெஞ்சம் மூழ்கும்;
ஒரு பிடி உண்டாலும் 
உன் நினைவுகளால் 
தொண்டைத் திக்கும்!

கொஞ்சம் சாப்பிடுங்க எனக் 
கெஞ்சலாய் நீ 
கொஞ்சும் போதெல்லாம்
முடியாது என 
முறைத்தத் தருணம்
இன்று முட்டித் தள்ளுகிறது;
நெஞ்சைக் கனக்கச் செய்கிறது!


வெதும்பிய உள்ளத்தால் 
விழிகள் தளும்பும்;
உன் நினைவுகளிலே 
நெஞ்சம் மூழ்கும்;
ஒரு பிடி உண்டாலும் 
உன் நினைவுகளால் 
தொண்டைத் திக்கும்!

கொஞ்சம் சாப்பிடுங்க எனக் 
கெஞ்சலாய் நீ 
கொஞ்சும் போதெல்லாம்
முடியாது என 
முறைத்தத் தருணம்
இன்று முட்டித் தள்ளுகிறது;
நெஞ்சைக் கனக்கச் செய்கிறது!