ஒலிகளுக்கு
வழிக்கொடுக்கும்
சவ்வுகள் இரண்டும்
சாத்திக்கொண்டு;
விழிகளின் ஓரம்;
ஈரம் ஓட்டிக்கொண்டு;
புதுமையாய் வயிறுக்
கதைக்க
இரைச்சலாய்
எரிச்சலாய்!
உணவைக் கொட்டுவதற்கு
முன்னே கொஞ்சம்
எட்டிப்பாருங்கள்;
விரையமாகும் உணவுகள்
எங்களுக்கு
இரையாகும்;
வலியிலேக் கனமான
முதுகுத்தண்டையும்
நிமிரவைக்கும்!




