ஒரு முறைக் கூட


என்ன வேண்டும்
என்றதும்;
கொட்டித்தீர்த்தாய்;
உதைத்துப் பிரளப் பந்து;
அடித்து விளையாட
மட்டை;
அணைத்துக் கொள்ளப்
பொம்மை;
இழுத்துச் செல்லச்
சிறுவண்டி;
ருசித்துக் கொள்ள
மிட்டாய்;
பசியை வெல்ல ரொட்டி;
வரிசைப்படுத்தும்
சொல்லழகைக் கேட்டும்;
விழியின் தாழ்ப்பாளை
உடைத்துக் கண்ணீர்
கரைப் புறண்டது;
ஒரு முறைக் கூட
நான் வேண்டும் என;
நீ உரைக்காததைக் கண்டு!

என்ன வேண்டும்
என்றதும்;
கொட்டித்தீர்த்தாய்;
உதைத்துப் பிரளப் பந்து;
அடித்து விளையாட
மட்டை;
அணைத்துக் கொள்ளப்
பொம்மை;
இழுத்துச் செல்லச்
சிறுவண்டி;
ருசித்துக் கொள்ள
மிட்டாய்;
பசியை வெல்ல ரொட்டி;
வரிசைப்படுத்தும்
சொல்லழகைக் கேட்டும்;
விழியின் தாழ்ப்பாளை
உடைத்துக் கண்ணீர்
கரைப் புறண்டது;
ஒரு முறைக் கூட
நான் வேண்டும் என;
நீ உரைக்காததைக் கண்டு!

ஊனம்



உறுப்புகள் அழகாகி;
உள்ளம் கோணலான
உறவுகள் உரைக்கும்
எனை ஊனம் என்று!

உற்சாகத்தை
விற்பனைச் செய்து;
உதாசீனத்தை
உதடுகளால் முத்தமிடும்
உறவுகள் உரைக்கும்
ஊனம் நான் என்று!

நன்மைச் செய்யக்
கரம் இருந்தும்;
அன்பைப் பொழியும்
விழி இருந்தும்
ஊமையான உள்ளம்
உரைக்கும்
ஊனம் நான்தான் என்று!

விளக்கியப் பின்னும்;
விளங்காத உள்ளங்கள்
உரைக்கும் என்னை
உடல் நலம் குன்றியவர் என;
உள்ளுக்குள்ளே
உரைத்துக்கொள்வேன்;
பாவம் அவர்;
மனநலம் குன்றியவர் என!


உறுப்புகள் அழகாகி;
உள்ளம் கோணலான
உறவுகள் உரைக்கும்
எனை ஊனம் என்று!

உற்சாகத்தை
விற்பனைச் செய்து;
உதாசீனத்தை
உதடுகளால் முத்தமிடும்
உறவுகள் உரைக்கும்
ஊனம் நான் என்று!

நன்மைச் செய்யக்
கரம் இருந்தும்;
அன்பைப் பொழியும்
விழி இருந்தும்
ஊமையான உள்ளம்
உரைக்கும்
ஊனம் நான்தான் என்று!

விளக்கியப் பின்னும்;
விளங்காத உள்ளங்கள்
உரைக்கும் என்னை
உடல் நலம் குன்றியவர் என;
உள்ளுக்குள்ளே
உரைத்துக்கொள்வேன்;
பாவம் அவர்;
மனநலம் குன்றியவர் என!

வாய்வு தொல்லை



குழப்பம் கொண்டக்
குடலால்;
குடைந்து எடுக்கும் காற்று;
வயிறு இரைச்சலால்
எரிச்சல் கொடுத்து;
தொண்டைக்குள்
சுற்றி வளையமிட்டு;
வருமா வராதா
என எதிர்ப்பார்த்தால்;
ஏமாற்றி செல்லும்
ஏப்பம்!

செரிமாணக் கோளாறு
என எண்ணி;
வாயு ஒழிக்க;
வாயு நிரம்பிய
குளிர்பானத்தை 
வாயில் விட்டால்;
குமுறிகொண்டிருக்கும்
குடல்களைப் பதம்பார்த்துப்
பாடம் செய்ய;
நான் கற்றுக்கொண்ட
இன்னொருப் பாடம்! 


குழப்பம் கொண்டக்
குடலால்;
குடைந்து எடுக்கும் காற்று;
வயிறு இரைச்சலால்
எரிச்சல் கொடுத்து;
தொண்டைக்குள்
சுற்றி வளையமிட்டு;
வருமா வராதா
என எதிர்ப்பார்த்தால்;
ஏமாற்றி செல்லும்
ஏப்பம்!

செரிமாணக் கோளாறு
என எண்ணி;
வாயு ஒழிக்க;
வாயு நிரம்பிய
குளிர்பானத்தை 
வாயில் விட்டால்;
குமுறிகொண்டிருக்கும்
குடல்களைப் பதம்பார்த்துப்
பாடம் செய்ய;
நான் கற்றுக்கொண்ட
இன்னொருப் பாடம்! 

புரோட்டா



நீ இல்லாத
விருந்துகளும் குறைவு;
உனை ரசித்து
தொடர்ந்து உண்டுவந்தால்
ஆயுளும் குறைவு!

குடல்வலிமையை நீ
புரட்டி எடுக்க;
புரட்டி எடுத்த உனை
நாங்கள் மென்று ரசித்துப்
பழித்தீர்க்க;
கோபித்துக்கொண்ட நீயோ
செரிமாணம் கொள்ளாமல்;

எங்களைக்
கொல்லாமல் கொல்ல;
புதுப் புது வியாதிகளை
நாங்கள் அள்ள!

புரியாத பாஷையில்
உனக்கு யார் வைத்தாரோ
பெயர் புரோட்டா;
கடை எழுத்துக்கள் மட்டும்
கண் முன்னே;
தின்றுக்கொழுத்தால்
நீ காட்டப்போவது எங்கள்
வாழ்விற்கு டா டா என்று!


தலைப்புத் தந்தவர்:
ஆரீஸ் முகம்மது - வடகரை (மாயவரம்) 


நீ இல்லாத
விருந்துகளும் குறைவு;
உனை ரசித்து
தொடர்ந்து உண்டுவந்தால்
ஆயுளும் குறைவு!

குடல்வலிமையை நீ
புரட்டி எடுக்க;
புரட்டி எடுத்த உனை
நாங்கள் மென்று ரசித்துப்
பழித்தீர்க்க;
கோபித்துக்கொண்ட நீயோ
செரிமாணம் கொள்ளாமல்;

எங்களைக்
கொல்லாமல் கொல்ல;
புதுப் புது வியாதிகளை
நாங்கள் அள்ள!

புரியாத பாஷையில்
உனக்கு யார் வைத்தாரோ
பெயர் புரோட்டா;
கடை எழுத்துக்கள் மட்டும்
கண் முன்னே;
தின்றுக்கொழுத்தால்
நீ காட்டப்போவது எங்கள்
வாழ்விற்கு டா டா என்று!


தலைப்புத் தந்தவர்:
ஆரீஸ் முகம்மது - வடகரை (மாயவரம்) 

மல்லிகைப் பூ



என்னை
நெருங்கும்போதே
மூக்கோடுச் சேர்ந்து
முகத்தையும்
சிரிக்கச் செய்வேன்!

மழைப் பெய்தாலும்;
வெயில் வென்றாலும்
விலையேற்றி ரசிப்பார்;
விலை உயர்ந்தப்
பொன்னைகையும்
மங்கையர் சிறிது
நேரம் மறப்பார்!

மென்மையான வண்ணம்
கொண்ட எனக்கு;
வன்மையான
விலை வந்தாலும்;
விழி விரியச் செய்வேன்;
மணம் கமழ
மனிதர் மனம் கவிழ்ப்பேன்!


என்னை
நெருங்கும்போதே
மூக்கோடுச் சேர்ந்து
முகத்தையும்
சிரிக்கச் செய்வேன்!

மழைப் பெய்தாலும்;
வெயில் வென்றாலும்
விலையேற்றி ரசிப்பார்;
விலை உயர்ந்தப்
பொன்னைகையும்
மங்கையர் சிறிது
நேரம் மறப்பார்!

மென்மையான வண்ணம்
கொண்ட எனக்கு;
வன்மையான
விலை வந்தாலும்;
விழி விரியச் செய்வேன்;
மணம் கமழ
மனிதர் மனம் கவிழ்ப்பேன்!