நானூறாவது கவிதை


கனத்தத் தருணமும்;
வெறுத்தத் தனிமையும்;
பிரசவமாகி இன்று!

வடித்த நீரும்;
வலித்த மனதிற்கும்
இன்றோடு வயது
நானூறை எட்டி!

எழுத்துப் பிழைகளைத் தாண்டி;
மனதின் ஆழத்தைத் தோண்டி;
மொத்தப் பக்கங்களில்
என் பக்கத்தில்
எச்சத்தை எறிந்து
மிச்ச இடத்தை
ஆக்கிரமிப்பு செய்யும்
என் நானூறாவதுக் கவிதை!

நிமிடங்களை மென்று;
நேரங்களைத் தின்று;
கண்ணுங் கருத்துமாய்
நான் எழுதும்
நானூறாவது உண்மை!

கனத்தத் தருணமும்;
வெறுத்தத் தனிமையும்;
பிரசவமாகி இன்று!

வடித்த நீரும்;
வலித்த மனதிற்கும்
இன்றோடு வயது
நானூறை எட்டி!

எழுத்துப் பிழைகளைத் தாண்டி;
மனதின் ஆழத்தைத் தோண்டி;
மொத்தப் பக்கங்களில்
என் பக்கத்தில்
எச்சத்தை எறிந்து
மிச்ச இடத்தை
ஆக்கிரமிப்பு செய்யும்
என் நானூறாவதுக் கவிதை!

நிமிடங்களை மென்று;
நேரங்களைத் தின்று;
கண்ணுங் கருத்துமாய்
நான் எழுதும்
நானூறாவது உண்மை!

பிதிங்கி ஓடும்


திணறடிக்கும் உன் நினைவுகள்
திமிர் பிடித்து என் நெஞ்சை அழுத்த;
நாவு வறண்டு;
படுக்கையில் புறண்டு;
மெல்ல நேரம் பார்த்தாலும்
மெதுவாய் நகரும் நேரம்!

மெத்தையில் உருளும் போது;
மூட்டைப்பூச்சிக் கடிக்கிறதா என
நண்பர்கள் முடிச்சுப்போட;
உள்ளுக்குள்ளே
உரைத்துக்கொள்வேன்;
வெடிக்கிறது என!

பிதிங்கி ஓடும்
பணத்தை பக்குவமாய்
சேர்த்துக் கொண்டு;
உன்னோடு ஊரோடுச்
சேர்ந்துவிடலாம் என்று
நினைத்தாலும்
ஒட்டாமல் ஓடுகிறது;
எண்ணங்கள் ஏங்குகிறது!

திணறடிக்கும் உன் நினைவுகள்
திமிர் பிடித்து என் நெஞ்சை அழுத்த;
நாவு வறண்டு;
படுக்கையில் புறண்டு;
மெல்ல நேரம் பார்த்தாலும்
மெதுவாய் நகரும் நேரம்!

மெத்தையில் உருளும் போது;
மூட்டைப்பூச்சிக் கடிக்கிறதா என
நண்பர்கள் முடிச்சுப்போட;
உள்ளுக்குள்ளே
உரைத்துக்கொள்வேன்;
வெடிக்கிறது என!

பிதிங்கி ஓடும்
பணத்தை பக்குவமாய்
சேர்த்துக் கொண்டு;
உன்னோடு ஊரோடுச்
சேர்ந்துவிடலாம் என்று
நினைத்தாலும்
ஒட்டாமல் ஓடுகிறது;
எண்ணங்கள் ஏங்குகிறது!

அறிவுறை..




கொடுத்தேப் பழக்கப்பட்ட
உள்ளங்கள் என்னை
ஏற்க மறுக்கும்;
மலிவு என்று
கழிவில் கிடத்தும்!

வாலிபர்களின் கேலிக்கும்;
வயோதிகர்களின்
வர்ணனைக்கும் நான்;

கொடுப்பது இனிக்கும்;
ஏற்பதுக் கசக்கும் என்று
அறிவுறைக்கு அறிவுறைச்
சொல்லி அழகாய் மூலையில் நான்;
யார் மூளையிலும் இல்லை நான்!



கொடுத்தேப் பழக்கப்பட்ட
உள்ளங்கள் என்னை
ஏற்க மறுக்கும்;
மலிவு என்று
கழிவில் கிடத்தும்!

வாலிபர்களின் கேலிக்கும்;
வயோதிகர்களின்
வர்ணனைக்கும் நான்;

கொடுப்பது இனிக்கும்;
ஏற்பதுக் கசக்கும் என்று
அறிவுறைக்கு அறிவுறைச்
சொல்லி அழகாய் மூலையில் நான்;
யார் மூளையிலும் இல்லை நான்!

இன்னுமா அழவில்லை..



வெடித்த உணர்ச்சிகளால்
துடித்த உதடுகள்;
வழியும் கண்ணீரைத்
துடைக்க மனமில்லாமல்
இன்னும் வடிக்கப் பிழிகிறேன்!

கறைப்படிந்த உள்ளத்தைக்
கண்ணீரால் முட்டி
உடைத்து எடுக்கிறேன்!

மணம் இழந்த
மனதை மணக்கச் செய்ய;
உப்புத் தண்ணீரால்
செழிக்கச் செய்யுங்கள்;
மறையோனின் மன்னிப்பை
பெற்றுக்கொள்ளுங்கள்!


வெடித்த உணர்ச்சிகளால்
துடித்த உதடுகள்;
வழியும் கண்ணீரைத்
துடைக்க மனமில்லாமல்
இன்னும் வடிக்கப் பிழிகிறேன்!

கறைப்படிந்த உள்ளத்தைக்
கண்ணீரால் முட்டி
உடைத்து எடுக்கிறேன்!

மணம் இழந்த
மனதை மணக்கச் செய்ய;
உப்புத் தண்ணீரால்
செழிக்கச் செய்யுங்கள்;
மறையோனின் மன்னிப்பை
பெற்றுக்கொள்ளுங்கள்!

திரும்பிவிடு என் கணவா!



மொட்டு விட்ட நம் உறவால்
முட்டி நிற்கும் என் வயிறு;
குறைவான உன் விடுப்பால்
குளமானது என் விழிகள்;

எனக்காக என்று
என்னை விடுத்து
எண்ணெய் தேசத்தில் நீ;

மணம் மாறாப்
புதுப்பெண்ணாய்;புண்ணாகியப்
புன்முறுவலுடன் நான்;

ஏக்கத்துடன்
தூக்கத்தைத் தொலைத்து;
மிச்சமிருந்து வாசணை
வீசும் உன் அழுக்குச்
சட்டையோடுச்
சண்டைப்போடும் உன் மனைவி!


மொட்டு விட்ட நம் உறவால்
முட்டி நிற்கும் என் வயிறு;
குறைவான உன் விடுப்பால்
குளமானது என் விழிகள்;

எனக்காக என்று
என்னை விடுத்து
எண்ணெய் தேசத்தில் நீ;

மணம் மாறாப்
புதுப்பெண்ணாய்;புண்ணாகியப்
புன்முறுவலுடன் நான்;

ஏக்கத்துடன்
தூக்கத்தைத் தொலைத்து;
மிச்சமிருந்து வாசணை
வீசும் உன் அழுக்குச்
சட்டையோடுச்
சண்டைப்போடும் உன் மனைவி!