சாபக்கேடு


மாதமே முடிந்திருந்தது;
மணக் கோலத்தில்
நீயும் நானும்;
முழுமையாக 
உன் முகம் பார்க்கவே 
நாட்களை மென்று;
உறவுகள் பரிகாசத்தால் 
எனைக் கொன்று!

இரத்தப் பந்துக்களை 
பின்னுக்குத் தள்ளி;
பாசத்தின் பட்டியலில் 
ஒரு வாரத்திற்குள்ளே
முதல் இடத்தில் நீ!

விடுப்பு முடிய
சில நாட்களே என;
சிரித்தப்படி - விழிகளை
ஒரமாய் நனையவிட்டப்படி நீ;
அதுவரை ஒட்டியிருந்த
சந்தோஷத் தருணம்;
இருதயத்தை ரணமாய்
கனமாய்; பலமாய் அழுத்த!

எட்டி நின்று;
செல்லமாய்;மெல்லமாய்;
அத்தாவையும்; மாமாவையும்
சீண்டியப் பொழுதுகள் சாட்டையடியாய்;
அம்மாவும்;அக்காவும்;
அழுததின் காரணம்
அழுத்தமாய் உதித்தது!

என்னைப் போன்றே;
ஏக்கத்துடன் எம் சமுதாயம்
மட்டும் சாபக்கேடாய்!

மாதமே முடிந்திருந்தது;
மணக் கோலத்தில்
நீயும் நானும்;
முழுமையாக 
உன் முகம் பார்க்கவே 
நாட்களை மென்று;
உறவுகள் பரிகாசத்தால் 
எனைக் கொன்று!

இரத்தப் பந்துக்களை 
பின்னுக்குத் தள்ளி;
பாசத்தின் பட்டியலில் 
ஒரு வாரத்திற்குள்ளே
முதல் இடத்தில் நீ!

விடுப்பு முடிய
சில நாட்களே என;
சிரித்தப்படி - விழிகளை
ஒரமாய் நனையவிட்டப்படி நீ;
அதுவரை ஒட்டியிருந்த
சந்தோஷத் தருணம்;
இருதயத்தை ரணமாய்
கனமாய்; பலமாய் அழுத்த!

எட்டி நின்று;
செல்லமாய்;மெல்லமாய்;
அத்தாவையும்; மாமாவையும்
சீண்டியப் பொழுதுகள் சாட்டையடியாய்;
அம்மாவும்;அக்காவும்;
அழுததின் காரணம்
அழுத்தமாய் உதித்தது!

என்னைப் போன்றே;
ஏக்கத்துடன் எம் சமுதாயம்
மட்டும் சாபக்கேடாய்!

2 comments:

  1. salam,

    வலியுடன் கூடிய நல்ல கவிதை....

    புதிய வரவுகள்:
    மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்,இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
    www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete