மரத்துப்போன இளமை


விலங்கிட்டக் கரங்கள்
பணத்திற்காக;
விடுதலைக்கு ஏங்குகிறோம்
பாசத்திற்காக!

எங்கள் முகங்கள்
கடல் கடந்து;
விழிகள் மட்டும்
தேடித் தேடிச் சோர்ந்துப்போய்
உறங்கப்போகும்!

படுத்தப்பின்னே
வருடிவிடும் விழிகளை;
காய்ந்துப்போன கண்ணீர்
தடங்கள் காலையில்
தடயமாக!

பட்டினிக்கிடந்து
மரத்துப்போன இளமைக்கு;
மானசீகமாய் மனதளவில்
உண்ணாவிரதம்!

ஒழுக்கத்திற்கு வேட்டுவைத்து;
தவறுக்கு ஓட்டுப்போடும்
வாய்ப்புக் கிடைத்தாலும்
எட்டி உதைப்போம்!

மணம் வீசும் துணைவியின்
பாசத்திற்கு முன்னே;
மடிந்துவிடும் மனம் கெடுக்கும்
விபச்சாரப் பாசாணம்!

விலங்கிட்டக் கரங்கள்
பணத்திற்காக;
விடுதலைக்கு ஏங்குகிறோம்
பாசத்திற்காக!

எங்கள் முகங்கள்
கடல் கடந்து;
விழிகள் மட்டும்
தேடித் தேடிச் சோர்ந்துப்போய்
உறங்கப்போகும்!

படுத்தப்பின்னே
வருடிவிடும் விழிகளை;
காய்ந்துப்போன கண்ணீர்
தடங்கள் காலையில்
தடயமாக!

பட்டினிக்கிடந்து
மரத்துப்போன இளமைக்கு;
மானசீகமாய் மனதளவில்
உண்ணாவிரதம்!

ஒழுக்கத்திற்கு வேட்டுவைத்து;
தவறுக்கு ஓட்டுப்போடும்
வாய்ப்புக் கிடைத்தாலும்
எட்டி உதைப்போம்!

மணம் வீசும் துணைவியின்
பாசத்திற்கு முன்னே;
மடிந்துவிடும் மனம் கெடுக்கும்
விபச்சாரப் பாசாணம்!

4 comments:

  1. அருமையான வரிகள்; நன்றாக உள்ளது .

    ReplyDelete
  2. மிக்க நன்றி Mahan.Thamesh அவர்களே.

    ReplyDelete
  3. புதுசா கருத்திடுபவர்களுக்குத் தான் பதில் போடுவீர்களோ.....

    ReplyDelete
  4. அய்யோ; அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ம.தி.சுதா அவர்களே.ஆரம்பத்தில் வாசகர்களின் கருத்திற்கு பதில் அளிக்காமல் இருந்தேன் போதிய நேரமின்மையால்,ஆனால் தற்போது அதற்கான நேரத்தை ஓதிக்கி மறுபதில் இடுகிறேன்.தற்போது நீங்கள் கேட்டக் கேள்வியால் என் பதிலும் வாசகர்களால் கவனிக்கப்படுகிறது என்றுத் தெரியவருகிறது.சரியான நேரத்தில் எனக்கு உணர்த்தியமைக்கு மிக்க நன்றி. பலமுறை நீங்கள் கருத்துப் பதிந்து இருக்கீர்கள் அதற்காகவும் நன்றி.என்றும் என் தளத்தோடு நீங்களும் உங்கள் நண்பர்களும் இணைந்திருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete